அவர் உலகக்கோப்பையை வெல்ல விரும்பினார் …ஆனால் முடியவில்லை..! மனம் திறந்த இர்பான் பதான்.

Irfan Pathan

இர்பான் பதான் :  முன்னாள் வீரரான இர்பான் பதான் 2024 கோப்பையை வென்றது அந்த முன்னாள் வீரருக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

நடைபெற்று முடிந்த இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் பணியாற்றினார். இதன் மூலம் இந்திய அணி வென்ற இந்த உலகக்கோப்பை தான் அவருக்கு முதல் உலகக்கோப்பையாகும். அவர் விளையாடிய காலத்தில் 2003-ஆண்டில் இறுதி போட்டி வரை இந்திய அணி வந்து, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்திருக்கும்.

அதன் பின் அவர் சர்வேதச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். பின் இந்திய அணிக்கு 2021 ஆண்டு முதல் தலைமை பயிற்சியாளராக செயலாற்றினார். அப்போதும் இந்திய அணி முக்கியமான போட்டிகளில் தோல்வியை கண்டிருக்கும். கடந்த 2023 ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் கூட ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவி இருக்கும். தற்போது வெற்றி பெற்ற இந்த உலகக்கோப்பை தான் அவருக்கு முதல் உலகக்கோப்பையாகும்.

இந்த கோப்பை ட்ராவிடுக்கு சிற்பபானதாக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய போது கூறினார். அவர் பேசுகையில், “அவர் ஒரு பயிற்சியாளராக உலகக் கோப்பையை வெல்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனென்றால், அவர் ஒருபோதும் உலகக் கோப்பையை வென்றதில்லை. அவர் உலகக் கோப்பையை வெல்ல விரும்பினார், ஆனால் அது அப்போது நடக்கவில்லை. அவர் இந்தியாவுக்காக ஒரே ஒரு டி20ஐ போட்டி மட்டுமே விளையாடினார்.

ஆனால், உலகக் கோப்பையை வெல்ல முடிந்தது. இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அவருக்கு இருக்கும். இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு அவர் அணிகளில் ஒருவரானார், ஒரு குழந்தையை போல அவரை காற்றில் தூக்கி எறிந்து விளையாடினார்கள். நம் வாழ்நாளில் இது போல ஒரு நிகழ்வை காண்போம் என நாம் கற்பனை செய்திருக்க மாட்டோம். நம் வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும், ஆனால் இந்த தருணம் ராகுல் டிராவிட்டால் என்று மறக்க இயலாது”, என்று அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்