#INDvsENG : அஸ்வினுக்கு பதில் இவரா..? எம்சிசியின் சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா..?
இந்தியா, இங்கிலாந்து இடையேயான நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியின் 3-வதுநாள் இன்று நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான நேற்று ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டை எடுத்து சாதனை படைத்தார். இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் அஸ்வின் 2-ம் இடத்தில் உள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் 3 வது டெஸ்ட்டிலிருந்து விலகல் !
முன்னாள் சூழல் பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் நேற்று இரவு தனிப்பட்ட காரணத்தால் விளையாடி கொண்டிருந்த 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். இதனால் அவருக்கு பதிலாக இந்தியாவின் இளம் வீரரான தேவதூத் படிக்கல் மாற்று வீரராக அணியில் இடம் பெற்றுள்ளார்.
எம்சிசி (MCC) -ன் விதி எண்: 24.1.1.2 படி விளையாடி கொண்டு இருக்கும் ஒரு வீரர் அந்த போட்டியில் இருந்து விலகினால் அவருக்கு பதிலாக களமிறங்கும் மாற்று வீரர் பந்து வீசவோ அல்லது அணியின் கேப்டனாகவோ செயல் பட முடியாது.
மேலும், அந்த மாற்று வீரர் விக்கெட் கீப்பராக செயல்பட வேண்டுமென்றால் நடுவர் சம்மதத்துடன் விக்கெட் கீப்பராக செயல்படலாம். ஒருவேளை விளையாடி கொண்டிருந்த ஒரு வீரருக்கு காயம் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் மட்டுமே அவருக்கு பதிலாக களமிறங்கும் மாற்று வீரரால் பந்து வீசவும், பேட்டிங் செய்யவும் முடியும்.