கேட்ச் விட்டாச்சு..பீல்ட்டிங் சரியில்லை! கேஎல் ராகுலால் அப்செட்டில் ரசிகர்கள்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் சுலபமான கேட்சை தவறவிட்டது அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவை கோபமடைய செய்துள்ளது.

kl rahul

துபாய் :  சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியில் கீப்பராக எந்த வீரர் விளையாடப்போகிறார் என்கிற கேள்விகள் எழும்பியது. ஒரு பக்கம் கே.எல் ராகுல் விளையாடவேண்டும் எனவும் மற்றொரு பக்கம் ரிஷப் பண்ட் விளையாடவேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தது. இறுதியாக கம்பீர் கே.எல் ராகுலை விளையாட வைப்பதில் உறுதியாக இருந்த காரணத்தால் அவருக்கு விளையாட வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட வாய்ப்பை ஒரு சில சமயங்களில் கே.எல் ராகுல் சரியாக பயன்படுத்தினாலும் சில போட்டிக்களில் பேட்டிங்கில் அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அது மட்டுமின்றி  மோசமாக பீல்டிங் செய்தும் வருகிறார். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில், ரவீந்திர ஜடேஜாவின் பந்தில் ஜாகர் அலியை ஸ்டம்ப் செய்யும் வாய்ப்பு கிடைத்தபோதிலும், ராகுல் பந்தை பிடிக்க தவறினார்.

அதைப்போல, நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் சில தவறுகளை செய்தார்.  ஆட்டத்தின் 11வது ஓவரின் இறுதிப் பந்தில், வில்லியம்சன் 21 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆக்சர் படேலின் பந்தை கட் செய்ய பின்வாங்கினார்அப்போது அந்த பந்து எட்ஜ் ஆகி கேட்ச் பிடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், அந்த சுலபமான கேட்சை கே.எல்.ராகுல் கோட்டைவிட்டார். கேட்சை அவர் தவறவிட்டவுடன் முன்னணி வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் அதிருப்தி அடைந்தனர். கேட்ச் மட்டுமின்றி ஒரு பந்தை பிடிக்காமல் பின்புறம் உள்ள பவுண்டரிக்கும் விட்டார். அந்த கேட்சை கேஎல் ராகுல் பிடித்திருந்தால் நிச்சயமாக விரைவாகவே வில்லியம்சன் அவுட் ஆகி இருப்பார். ஆனால், தவறவிட்ட காரணத்தால் தனி ஆளாக நின்று 81 ரன்கள் விளாசினார்.

இதனையடுத்து, முக்கியமான தொடரில் இப்படியா விளையாடுவது? பேட்டிங்கும் சரியில்லை…கீப்பிங்கும் சரியில்லை இவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை விளையாட வைத்திருக்கலாம் என கூறி நெட்டிசன்கள் பலரும் கே.எல்.ராகுலை விமர்சனம் செய்து வருகிறார்கள். மற்றொரு பக்கம் இந்த தொடரில் கேஎல்ராகுல்  சொதப்பலாம் ஆனால் இதற்கு முன்பு என்ன செய்திருகிறார் என்பதை பாருங்கள் எனவும் அவருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்