டி20 கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் இவர்தான்! கில்லின் சாதனை முறியடிப்பு!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றார். சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 10 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஏற்கனவே கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, படகுபந்தயம் உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆசிய கிரிக்கெட் டி20 வடிவத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இந்திய கிரிக்கெட் வாரியம் முதல் முறையாக ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு கிரிக்கெட் அணிகளை ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இதில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இலங்கையை அணியை வீழ்த்தி முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றது. தற்போது ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
ஆசிய கிரிக்கெட் போட்டிக்காக ருத்ராஜ் தலைமையிலான 15 இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றன. நேபாளம், மாலத்தீவு, மங்கோலியா, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட 9 அணிகள் லீக் சுற்றில் விளையாடின.
லீக் ஆட்டங்கள் முடிவில் நேபாளம், ஹாங்காங், மலேசியா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. இந்த சமயத்தில், ருத்ராஜ் தலைமையிலான இளம் இந்திய அணி ஆசிய கிரிக்கெட்டில் எவ்வாறு செயல்படும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்துகொண்டு இருக்கிறது. அந்தவகையில், இன்று நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான டி20ஐ முதல் காலிறுதி போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி, நேபால் அணியை எதிர்கொண்டது.
பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்தது. இளம் வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதன்பிறகு களமிறங்கிய நேபாள அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆசிய கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தியா சார்பாக அவேஷ் கான், ரவி பிஷ்னாய் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த நிலையில், டி20 கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். அதாவது, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆடவர் டி201 கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த இளைய இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்த சாதனையை 21 வயது 279 நாட்களில் படைத்துள்ளார். ஆசிய போட்டியில் இதுவரை எந்தவொரு இந்திய வீரரும் 30 ரன்களுக்கு மேல் எடுத்ததில்லை. இதன்மூலம், புதிய சாதனை படைத்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இதனால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரரின் முதல் சதம் இதுவாகும்.
அதுமட்டுமில்லாமல், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேபாளத்துக்கு எதிரான முதல் டி20 சதத்துடன் ஷுப்மான் கில்லின் இந்திய சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்தார். கில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 126 ரன்களை விளாசி சாதனை படைத்தார். இது டி20 வடிவத்தில் ஒரு இளம் இந்தியரின் அதிகபட்ச ஸ்கோராகும். 23 வயது 146 நாட்களில் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார். தற்போது இதனை 21 வயது 279 நாட்களில் முறியடித்துள்ளார்.
Yashasvi Jaiswal The Future of Indian Cricket ???? ❤️????#INDvNEP #AsianGames2022
RutuRaj Gaikwad #ugramm
Tilak #RuturajGaikwad T20I #IndiaAtAG22 #Hockey Dube
“Cristiano Ronaldo” #WWERaw #ChelseaFC #NewsClick “Sai Kishore”
Thiruvananthapuram #OMG2pic.twitter.com/XmhpmM3YPs— Jagadish Msdian ???????????? (@MsdianJr007) October 3, 2023