சென்னை அணியில் ரெய்னா இடத்தில் இவர்தான் இறங்குகிறார்.!
இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற சனிக்கிழமை முதல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகனான அட்டவணையையும் அண்மையில் வெளியானது.
மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், அதன்படி வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த இரண்டு அணியும் மோதவுள்ளது.
மேலும் இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் தனது சொந்த பிரச்சனைக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார், மேலும் தற்பொழுது ரசிகர்களுக்கு மத்தியில் ரெய்னாவின் இடத்தில யார் இறங்குவர் என்று கேள்வி எழும்பியுள்ளது.
இந்த நிலையில் சென்னை அணி தற்பொழுது ரெய்னா இடத்தில் முரளி விஜயை களமிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, மேலும் முரளி விஜய் மிகவும் சிறப்பாக சுழற்பந்துவீச்சாளர்களை விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.