mathew hayden[file image]
Mathew Hayden : ஐபிஎல் தொடரில் மிகவும் ஆபத்தான வீரரான வெளிநாட்டு வீரர் ஒருவரை பற்றி மேத்யூ ஹைடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசி இருந்தார்.
ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என ஒருசில பேட்ஸ்மேன்கள் மிகவும் அதிரடியாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் இந்த ஐபிஎல் தொடரின் டேஞ்சர் பிளியேரை பற்றி அவரது கருத்துகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய போது தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், “நடந்து முடிந்த சென்னை, லக்னோ போட்டியில் லக்னோ அணியின் பேட்டிங்கின் போது தேவதூத் படிக்கல் ஆட்டமிழந்ததும் எதிர்முனையில் இருந்த மார்கஸ் ஸ்டோனிஸ் பெரும் அழுத்தத்திற்கு உள்ளானார். அப்போது களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் ஆடிய ஆட்டம் அவருக்கு உறுதுணையாக இருந்தது. பூரனை பற்றி கூற வேண்டும் என்றால் அவர் இந்த ஐபிஎல் தொடரின் மிகவும் ஆபத்தான பேட்டர் ஆவார்.
அவர் சுழற் பந்துவீச்சாளர், வேக பந்து வீச்சாளர் என இரண்டு விதமான பவுலர்களையும் பெரிய சிக்சர்கள் அடிக்க கூடிய திறன் வாய்ந்தவர் ஆவார். அதே போல சிஎஸ்கே அணியில் ருதுராஜ் சிறப்பாக விளையாடினார். அவரை போன்று அணிக்கு தூணாக நின்று மார்கஸ் ஸ்டோனிஸ்ஸும் தனது லக்னோ அணிக்காக விளையாடினார்.
இருவரும் மிக கடுமையாக தங்களது அணிக்காக விளையாடினார்கள். மேலும், பெரிய சிக்ஸர்கள் அடிக்கக்கூடிய சென்னை அணியின் சிவம் துபே, லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரன் அவர்களது இன்னிங்ஸ் இறுதியில் மிகச்சிறப்பாக விளையாடினார்கள். லக்னோ அணியின் தீபக் ஹூடாவும் ஒரு சில பௌண்டரிகள் அடித்து அணியின் வெற்றிக்கு பக்க பலமாக அமைந்தார்”, என மேத்யூ ஹைடன் ஸ்போர்ட்ஸில் பேசி இருந்தார்.
இந்த ஐபில் தொடரில் இரண்டு முறை சென்னை, லக்னோ அணிகள் மோதியுள்ளது. ஆனால் இந்த இரண்டு முறையும் சென்னை அணியை, லக்னோ அணி அபாரமாக வீழ்த்தி தற்போது புள்ளிப்பட்டியலில், 10 புள்ளியுடன் சென்னை அணிக்கு முன்னதாக இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…