தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணியை வழிநடத்துவதில் ருதுராஜ் தான் சிறந்த வீரர் என முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.
16-வது ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு பிறகு, அந்த அணியை வழிநடத்துவதில் இளம்வீரரான ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த வாரிசு என முன்னாள் இந்திய அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு ஐபிஎல் தொடரின் அறிமுக போட்டியில் சிஎஸ்கே மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் 26 வயதான ருதுராஜ், தொடக்கம் முதல் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதிரடியாக விளையாடிய ருதுராஜ், 8 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
அவர் 50 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 4 போர்கள் என 92 ரன்கள் விளாசினார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், 26 வயதான ருதுராஜ் கெய்க்வாட், சிஎஸ்கேயின் கேப்டன் பதவிக்கு எம்எஸ் தோனியின் “சிறந்த வாரிசு” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுவரை இந்தியாவிற்கு விளையாடும் வாய்ப்பு ருதுராஜுக்கு அதிகமாக கிடைக்கவில்லை எனவும், இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு சிறப்பாக அமைந்தால் இந்திய அணியில் ருதுராஜ் விளையாடும் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் எனவும் சேவாக் கூறினார்.
சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…
சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர்…
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…