அவர் ரெடி தான் .. என்னானாலும் நடக்கலாம்! நம்பிக்கை கொடுக்கும் மோர்னே மோர்க்கல்!!

Morne Morkel

Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர்  ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இளம் வேக அந்த வீச்சாளரான மாயங்க் யாதவ் அதிவேக பந்தை வீசுவதில் வல்லவர் ஆவார். அவரது வேகத்திற்கு எந்த ஒரு பேட்ஸ்மேனும் நிலை குலைந்து போவார்கள். இவர் அறிமுகமான போட்டியிலும் சரி அதற்கு அடுத்த போட்டியிலும் சரி தொடர்ந்து ஆட்டநாயகன் விருதை இந்த ஐபிஎல் தொடரில் பெற்றுருந்தார்.

இவர் கடைசியாக குஜராத் அணியுடனான போட்டியில் அவர் வெறும் 1 ஓவரை மட்டும் வீசி இருந்தார். அந்த 1 ஓவரிலும் இவர் சாதரண வேகத்திலே (130-140) பந்து வீசி இருப்பார். அதன் பின் அந்த போட்டியில் பந்து வீசிருக்க மாட்டார். அதற்கு அடிவயிற்றில் அவருக்கு  ஏற்பட்ட காயம் ஆகும்.  இதனால் பஞ்சாப் அணியுடனான போட்டிக்கு பிறகு அணியின் தலைமை பயிற்சியாளரான வினோத் பிசிட், ‘அவர் எப்போதுமே பந்து வீச தயாராக இருக்கிறார்.

ஆனால் அவரது உடற்தகுதியை பொறுத்தே அவரை அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட வைப்போம்’ என கூறி இருந்தார். தற்போது அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் மோர்னே மோர்கெல் பத்திர்கையாளர்களிடம் மாயங்க் யாதவ் பற்றி பேசி இருந்தார். அவர் கூறுகையில், “அவர் கடந்த ஒரு சில போட்டிகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருக்கிறார். மேலும் எங்கள் அணியின் உதவி பயிற்சியாளரான லான்ஸ் க்ளூசனருடன் மற்றும் லக்னோ அணியில் மற்ற தோழர்களுடன் பயிற்சி செய்து தயாராக இருக்கிறார்.

அதனால் அடுத்ததாக வரவிருக்கும் ஏதாவது ஒரு போட்டியில் அவரை மீண்டும் உள்ளே அழைத்து வருவோம் என்று நான் நினைக்கிறன். அவர் மிகவும் நன்றாக மீண்டு வருகிறார் வந்துள்ளார். அவரது இந்த முன்னேற்றத்தை கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர் மூன்று நான்கு நாட்களுக்கு முன்பு பந்து வீசத் தொடங்கி விட்டார்.  அதனால் அவரும் தான் எப்போது வேண்டும் என்றாலும் பந்து வீசலாம் என்று தயாராகவே இருக்கிறார்.

ஒவ்வொரு பந்தும் 150 கி.மீ வீசுவதற்கு அவரது உடலையும், மனதையும் அவர் தன்னம்பிக்கையுடன் வைத்துள்ளார்” என்று அவரையும், அவரது உடற் தகுதி குறித்தும் மோர்னே மோர்கல் பத்திரிகையாளர்களிடம் பேசி இருந்தார். இதனால் இன்றைய சிஎஸ்கே அணியுடனான போட்டியில் மாயங்க் யாதவ் பந்து வீசுவார் என லக்னோ அணியின் ரசிகிரகள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்