லாக்கி பெர்குசன்: டி20 போட்டிகளில் சாதனையை முறியடிப்பதை பார்த்தாலே பார்ப்பதற்கு நன்றாக இருக்கும், அதே போல புதிய சாதனை நிகழ்த்தினால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தற்போது அதே போல ஒரு சாதனையை தான் பெர்குசன் நிகழ்த்தி உள்ளார்.
நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் நியூஸிலாந்து அணியும், பப்புவா நியூ கினி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனால் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினி அணி நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களிலேயே 78 ரன்களை மட்டுமே எடுத்தது.
மேலும், அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி வெற்றிகரமாக அந்த இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றது. நியூஸிலாந்து அணியின் பவுலிங்கின் போது இப்படி எளிய இலக்கில் பப்புவா நியூ கினி அணியை முடக்குவதற்கு முக்கிய புள்ளியாக அந்த அணியின் வேக பந்து வீச்சாளரான லாக்கி பெர்குசன் அமைந்துள்ளார்.
இந்த 4 ஓவர் ஸ்பெல்லின் (spell) மூலம் அவர் தற்போது ஒரு சர்வேதேச கிரிக்கெட்டில் உலக சாதனையையும் நிகழ்த்தி உள்ளார். அது என்னவென்றால் ஒரு சர்வேதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 4 ஓவர்கள் அவர் பந்து வீசி ஒரு ரன்களை கூட கொடுக்காமல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.
இதன் மூலம் இவர் சர்வேதச கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த ஸ்பெல்லை வீசிய பவுலராக முதல் இடத்தில் இருந்து வருகிறார். இவரது பந்து வீச்சில் பப்புவா நியூ கினி அணி மிக மோசமாக திணறினார்கள். ஒரு ரன்களை கூட விட்டு கொடுக்காமல் இப்படி சிறப்பாக பந்து வீசுவது முடியாத காரணம் என நாம் நினைக்கும் பொழுது அதனை இவர் கண்முண் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்.
இவரது இந்த சாதனையால் பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர். மேலும், இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடர் ஏலத்தில் இவர் மிகசிறந்த விலைக்கு வாங்கப்படுவர் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இவர் தற்போது ஆர்சிபி அணிக்காக விளையாடிவருகிறார், ஆர்சிபி அணி இவரை இந்த ஏலத்தில் ரீடேயின் செய்வார்களா என்பதையும் பொறுத்தே இருந்தே பார்க்க வேண்டும்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…