அவர் ஒன்னும் சூப்பர்மேன் அல்ல… பென் ஸ்டோக்ஸை நம்பி இருக்க முடியாது.. மார்க் வுட் ஓபன் டாக்!

Mark Wood

ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒரு “சூப்பர்மேன்” அல்ல என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்  கூறியுள்ளார். ஒயிட் பால் கிரிக்கெட்டின் 50 ஓவர், 20 ஓவர் என இரு வடிவங்களிலும் இங்கிலாந்து அணி உலக சாம்பியன் அணியாக இருக்கிறது. இங்கிலாந்து அணியின் குறிப்பாக அதிக ஆல்-ரவுண்டர்கள் நிறைந்த அணியாக உள்ளது. அதுவும், இளம் மற்றும் அனுபவ வாய்ந்த வீரர்கள் இருப்பது மேலும் வலுவாக இருக்கிறது.

இதனால், எந்த வடிவ கிரிக்கெட் என்றாலும் இங்கிலாந்து ஆட்டமே அதிரடியாக தான் இருக்கும். இந்த சமயத்தில், இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக, ஓய்வு அறிவிக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறது. இதனால், பென் ஸ்டோக்ஸின் பங்கு இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும்.

இருப்பினும், பென் ஸ்டோக்ஸ் காலில் ஏற்பட்டகாயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து லெவன்ஸில் இடம்பெறவில்லை. அந்த நேரத்திலேயே இங்கிலாந்து அணிக்கு இது ஒரு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கூறப்பட்டது. அப்போட்டியில், இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சரிவர அணுகாமல் சொதப்பியதால் 282 ரன்களுக்கு சுருண்டது.

இதுதான் அந்த ஆடுகளத்தில் குறைந்த ஸ்கோர் என்றும் விமர்சனத்துக்குள்ளானது. அதுமட்டுமில்லாமல், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சும் சொல்லுபடி அமையவில்லை. நியூசிலாந்து அணியின் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி 36 ஓவர்களில் இலக்கை எட்டியதால், பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இங்கிலாந்து அணி தோல்வி குறித்து முன்னாள் வீரர்கள் உள்ளிட்ட பலரும் விமர்சித்து வருகின்றனர். இதில், இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது குறித்து விவாதங்கள் உருவாகின. இந்த நிலையில், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒரு “சூப்பர்மேன்” அல்ல என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்  கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், கடினமான சூழ்நிலைகளில் இருந்து தங்களை காப்பாற்ற பென் ஸ்டோக்ஸை மட்டுமே நம்பி இருக்க முடியாது.

நான் அவர் மீது அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. பென் ஸ்டோக்ஸ் ஒரு “சூப்பர்மேன்” அல்ல. அவர் திரும்ப வந்து எல்லாவற்றையும் திருப்பி செய்வது பற்றியது இது கிடையாது. எங்கள் அணியின் சிறந்த வீரர்களில் பென் ஸ்டோக்ஸும் ஒருவர் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படிப்பட்டவர் அணியில் இல்லாவிட்டாலும், மற்ற வீரர்கள் எல்லோரும் சிறப்பாக செயல்பட வேண்டும். அவர் தனது காலை சுற்றி தற்பொழுது கட்டி இருக்கிறார். அது அவரை பயிற்சியை மேற்கொள்ள அனுமதிக்கிறதா? என்று பார்க்க வேண்டும் என கூறினார்.

எனவே, இந்த தோல்விகளில் இருந்து மீண்டு வர வேண்டும். எங்களால் அது செய்ய முடியும். நாங்கள் உலக கோப்பையை தக்க வைக்க விரும்புகிறோம் என்றும்  இங்கிலாந்து அவர்களின் சிறந்த விளையாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனிடையே, ஸ்டோக்ஸ் உலகக் கோப்பைக்கு முன்னதாக தனது ODI ஓய்வு முடிவை ரத்து செய்த பிறகு நியூசிலாந்திற்கு எதிரான முந்தைய நான்கு ஆட்டங்கள் கொண்ட தொடரில் 182 ரன்களை விளாசினார். இதனால் அவர் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்