அவர் தான் எனது “ஹீரோ”! ஸ்பின் கிங்கை பற்றி மனம் திறந்து பேசிய குலதீப் யாதவ்!
சென்னை : இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளரான குலதீப் யாதவ், ஆஸ்திரேலிய ஜாம்பவானாக ஷேன் வார்னே தான் எனது கிரிக்கெட்டின் ஹீரோ என்று பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுள் ஒருவரான குல்தீப் யாதவ் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்குச் சென்றுள்ளார். அங்கு மறைந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட்டரும், ஜாம்பவானுமான ஷேன் வார்னின் சிலைக்கு முன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், அந்த படத்தை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
குலதீப் யாதவ், ஷேன் வார்னின் மிக தீவிரமான ரசிகர் ஆவார். ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்றிருந்த ஷேன் வார்ன், பல பேட்ஸ்மேன்களை அவரது சுழலில் திணற வைத்துள்ளார். அவர் மறைந்தாலும் சுழல் பந்து வீச்சில் தற்போது அவரை அவர் ஒரு ‘ஸ்பின் கிங்’காக தான் கருதப்படுகிறார். ஷேன் வார்னை போலவே ஓரளவுக்கு அவரின் பவுலிங் ஸ்டைலில் குலதீப் யாதவ் பந்து வீசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவருமே லெக் ஸ்பின்னராக இருந்தாலும், இருவரும் ஒரே வித்தியாசம் தான் அது ஷேன் வார்ன் வலது கை பந்து வீச்சாளர், குலதீப் யாதவ் இடது கை பந்து வீச்சாளர் ஆவார். மேலும், குலதீப் யாதவ் சமீபத்தில் மேல்மொரன் கிரிக்கெட் மைதானத்திற்கு ஒரு பயணம் சென்றார். அந்த பயணத்தின் போது ஷேன் வார்னை பற்றி எமோஷனலாக அவர் பேசி இருந்தார்.
இதற்கு முன்னும் சமீபத்தில், ‘பிரேக் ஃபாஸ்ட் வித சாம்பியன்’ எனும் நிகழ்ச்சியில் குலதீப் யாதவ், ஷேன் வார்னே உடனான உறவைப் பற்றி கூறி இருப்பார். அதில் பேசிய அவர், “ஷேன் வார்னே தான் எனது ஹீரோ, அவருடன் எனக்கு மிகவும் நெருக்கமான தொடர்பு இருந்தது. அவரைப் பற்றி நினைக்கும் போது நான் இன்னும் அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறேன். அவரது இழப்பு என்பது என்னைப் பொறுத்தவரையில் என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை நான் இழந்துவிட்டதாக உணர்கிறேன்” என்று கூறி இருந்தார்.
Bowling Shane…. Always & Forever. pic.twitter.com/Dlb34fPnjp
— Kuldeep yadav (@imkuldeep18) August 23, 2024
ஷேன் வார்னே மீதுள்ள இந்த மரியாதையை நிமித்தமாக ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டு அங்கு அவரது சிலை முன்பு நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டா மற்றும் எக்ஸ்ஸில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் அனைத்தையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும்,வரும் நவம்பர் மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடைபெறவுள்ள பார்டர் கவாஸ்கர் தொடரில் குலதீப் யாதவ் அணியில் இருப்பர் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.