‘அவர் எனக்கு இன்னோரு மகன்’ ! ரிஷப் பண்ட் குறித்து கவலைப்பட்ட நடிகர் ஷாருக்!!
Published by
அகில் R
Shah Rukh Khan speaking With Rishab Pant [file image]
Shah Rukh Khan : ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட கார் விபத்தில், அவருக்கு ஒன்றும் ஆக கூடாது என்று நடிகர் ஷாருக் கான் கவலைப்பட்ததாக நேற்றைய போட்டியின் முடிவின் போது வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டில் டிசம்பர்-30 ம் தேதி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த பண்ட், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும், பல்வேறு மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தனது உடல்நிலையை சரி செய்து, தற்போது முழு உடற்தகுதியுடன் மீண்டும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறார்.
தற்போது, அவர் இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை அணியிலும் தேர்வாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் உரிமையாளரான பாலிவுட் நடிகரான ஷாருக் கான், டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட்டை சந்தித்து பேசினார்.
அதன் பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஸிடம் பேசிய ஷாருக் கான், “ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட கார் விபத்து சிசிடிவி வீடியோவைப் பார்த்து மிகவும் பதறி விட்டேன். அவர் எனக்கு ஒரு மகனை போன்றவர். அவருக்கு எந்த வித காயமம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நான் மிகவும் பயந்தேன். அவர் இப்போது மீண்டு வந்து நன்றாக விளையாடி கொண்டிருப்பதை பார்க்கையில் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
அவர் மேலும் தொடர்ந்து விளையாடுவார் என்று நான் நம்புகிறேன்”, என்று நேற்றைய போட்டிக்கு பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு அளித்த பேட்டியில் ரிஷப் பண்ட் குறித்து வருத்தம் தெரிவித்து பேசி இருந்தார். ரிஷப் பண்ட், விபத்தில் இருந்து மீண்டு கிட்டத்தட்ட 15 மாதம் 454 நாட்கள் என நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த ஐபில் தொடரில் களமிறங்கி விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.