அவருக்கெல்லாம் கேப்டன்சி அறிவு கிடையாது! சுப்மன் கில்லை விமர்சித்த அமித் மிஸ்ரா!
சுப்மன் கில் : இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் நடந்து முடிந்த ஜிம்பாவே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கேப்டனாக செயல்பட்டார். இந்த தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. இதன் காரணமாக கில் கேப்டன்சி பற்றி ஒரு பக்கம் பாராட்டுக்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா நான் தேர்வாளராக இருந்தால் நிச்சியமாக கில்லை கேப்டனாக போட்டிருக்கவே மாட்டேன் என விமர்சித்து பேசியுள்ளார்.
தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அமித் மிஸ்ரா ” நிச்சியமாகவே நான் சொல்கிறேன் சுப்மன் கில்லுக்கு கேப்டன் சி பற்றிய அறிவு போதுமானதாக இல்லை. எதற்காக இப்படி சொல்கிறேன் என்றால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட அவர் தான் கேப்டனாக செயல்பட்டு அணியை வழிநடத்தினார். எப்படி அணியை கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பது கூட அவருக்கு தெரியவில்லை என்பதை அப்போதே நீங்கள் பார்த்திருக்கலாம் .
என்னை பொறுத்தவரை அவர் நம்மளுடைய இந்திய அணியில் ஒரு சிறந்த வீரராக இருக்கிறார் எனவே, இதனை மட்டும் ஒரு காரணமாக வைத்து அதற்காக மட்டுமே அவரை கேப்டனாக நியமிக்கக் கூடாது. அவர் சிறப்பாக விளையாடி இருக்கிறார். அதில் எல்லாம் நான் குறையே சொல்லமாட்டேன். கடந்த சில ஐபிஎல் தொடர்களில் அவர் நன்றாக விளையாடியுள்ளார். இந்திய அணிக்கும் அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
ஆனால், அதே சமயம் அவர் கேப்டனாக வருகிறார் என்றால் அதற்கான திறமைகளையும் வளர்த்து கொள்ளவேண்டும். அப்படியான திறமைகளை அவர் வளர்த்து கொண்டால் மட்டும் தான் அவர் சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமின்றி சிறந்த கேப்டனாகவும் இருக்க முடியும்.
ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட போது அவரிடம் சரியான கேப்டன் செயல்கள் இல்லாதது போல தெரிந்தது. எனவே, இந்திய அணியில் இருப்பதன் ஒரே காரணத்துக்காக கேப்டனாக நியமிக்க கூடாது நான் தேர்வாளராக இருந்தேன் என்றால் நிச்சியமாக அவரை கேப்டனாக நியமித்து இருக்கமாட்டேன்” எனவும் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இவர் இப்படி பேசியுள்ளது கில் ரசிகர்களுக்கு மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.