“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

ரிஷப் பண்ட் விளையாட்டை பார்ப்பதற்காக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி பார்ப்பேன் என ஆடம் கில்சிறிஸ்ட் கூறியிருக்கிறார்.

Gilchrist - Pant

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தற்போது இந்திய அணி தனது பேட்டிங்கில் 2-வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இதில், தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்தாலும், தற்போது ரிஷப் பண்ட் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் இணைந்து இந்திய அணிக்கு வலு சேர்த்து வருகின்றனர்.

டெஸ்ட் போட்டியை தவிர்த்தும் ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டி அல்லது டி20 போட்டி என எந்த வித ஃபார்மட்டை எடுத்தாலும் அதில் இந்திய அணிக்கு பேட்டிங்கில் ஒரு இக்கட்டான நிலை என்றால் ரிஷப் பண்ட் தனது நிதான ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு பக்கபலமாக அமைவார்.

டி20-ஐ போலவே டெஸ்ட் போட்டிகளையும் கையாளும் இவரது தனித்துவமான ஆட்டத்திற்கு இங்கு பல ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் ஆஸ்திரேலியா முன்னாள் வீரரான ஆடம் கில்சிறிஸ்ட், ரிஷப் பண்ட் விளையாடும் போது பயம் இல்லாமல் விளையாடுகிறார் என பேசி இருக்கிறார்.

தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த ஆடம் கில்சிறிஸ்ட் கூறியதாவது, “ரிஷப் பண்ட் என்னைவிட கொஞ்சம் அதிரடியாக விளையாடுகிறார் என்று நினைக்கிறேன். நான் ஆக்ரோஷமான பேட்டிங்கால் பிராண்டாக திகழ்ந்தேன், அதே போல அவரும் இருக்கிறார். அவருக்கு களத்தில் துளியும் பயமில்லை.

எனக்கு அவரிடம் மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால் போட்டியில் அழுத்தம் ஏற்படும் பொழுது அதிரடியாக விளையாடி அந்த போட்டியின் போக்கை மாற்றிவிடுவது தான்.உண்மையாகவே நான் ரிஷப் பண்ட் விளையாட்டை பார்ப்பதற்காக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி பார்ப்பேன்.

இதை மக்களும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அவரிடம் உண்மையாகவே ஏதோ ஒன்று இருக்கிறது என அர்த்தம். அவர் தற்போது மிகப்பெரிய ஆபத்திலிருந்தும் பிழைத்து வந்திருக்கிறார். அவர் எல்லாவற்றிலும் சற்று வேடிக்கையானவர், வேடிக்கையான வழியிலேயே எல்லாவற்றையும் செய்ய அவருக்கு நன்றாக தெரியும்”, என்று ஆடம் கில்கிறிஸ்ட் பேசி இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School
GST Tax devolution State wise