அவனுக்கு பேட்டிங் செய்யவே தெரியாது! அசுதோஷ் சர்மா குறித்து பயிற்சியாளர் சொன்ன விஷயம்!
ஆஷுதோஷ் சர்மாவின் ரயில்வே அணி பயிற்சியாளர் அவருக்கு பேட்டிங் தெரியாது" என கூறியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி : கடந்த மார்ச் 24 -ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸுக்கு எதிராக பேட்டிங் செய்தபோது, 65 ரன்களுக்கு அரை அணி அவுட் ஆன பிறகு அணி கடும் சிக்கலில் இருந்தது. அணியைப் பொறுத்தவரை 210 ரன்கள் என்ற பெரிய இலக்கை எட்ட வேண்டியிருந்தது. அப்போது அசுதோஷ் சர்மா 31 பந்துகளில் அபாரமாக 66 ரன்கள் எடுத்து, தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அந்த அதிரடி ஆட்டத்தில் இருந்து அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமும் உருவாகிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த நாளில் இருந்து இப்போது வரை கிரிக்கெட் வட்டாரத்தில் யார்ரா இந்த பையன் என அசுதோஷ் சர்மா குறித்து இணையவாசிகள் தேட தொடங்கிவிட்டார்கள். இந்த சூழலில், பரபரப்பை கிளப்பும் வகையில், இந்திய ரயில்வே அணியின் பயிற்சியாளரும், ராஜஸ்தானின் முன்னாள் விக்கெட் கீப்பருமான நிகில் டோரு, ஆஷுதோஷ் சர்மா குறித்து பேசியிருக்கிறார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய நிகில் டோரு, ரயில்வே அணியில் ஆஷுதோஷின் தேர்வுக்கு தேர்வாளர்கள் முற்றிலும் எதிராக இருந்ததாக கூறினார். “ஆஷுதோஷுக்கு பேட்டிங் தெரியாது. அவர் பெரிய ஷாட்களை மட்டுமே அடிக்க முடியும். அவரை தேர்வு செய்ய நான் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தேன். அவரால் போட்டியை மாற்றக்கூடிய வீரராக உருவெடுக்க முடியும் என்பதை அவசியமாக கருதினேன்.
முதல் மூன்று அல்லது நான்கு போட்டிகளில் அசுதோஷ் சர்மா தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு காரணம் அவரால் நிலையாக விளையாடமுடியாது அதிரடியாக மட்டுமே விளையாட முடியும் என்று அவரை தேர்வு செய்யவில்லை. அதன்பிறகு பின்னர் குஜராத்துக்கு எதிரான போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் டோரு தெரிவித்தார். தேர்வாளர்களின் எண்ணம், ஆஷுதோஷ் தோல்வியடைந்தால் அவரை அணியில் இருந்து நீக்கிவிடலாம் என்பதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இப்போது அவர் அதே பாணியில் அதிரடியாக விளையாடி டெல்லி அணியில் தனக்கான இடத்தை பிடித்தது மகிழ்ச்சி எனவும்” பயிற்சியாளர் நிகில் டோரு தெரிவித்துள்ளார். மேலும், அசுதோஷ் சர்மா தொடர்ச்சியாக இது போன்று அதிரடியாகவே விளையாடி கொண்டு இருந்தால் அதுவும் ஒரு விமர்சனங்கள் எழுவதற்கு காரணமாக அமையலாம் எனவே, விமர்சனங்களை எப்படி தாண்டி எப்படி விளையாடப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.