மலிங்காவை பின்னுக்கு தள்ளிய ஹசரங்கா..? என்ன சாதனை தெரியுமா..?

Published by
அகில் R

இலங்கை அணியின் யார்கர் (Yorker) கிங் என அழைக்கப்படும் லசித் மலிங்காவிற்கு அடுத்த படியாக டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கடந்த இரண்டாவது இலங்கை வீரராக மலிங்காவுடன் இணைந்துள்ளார்  இலங்கை அணியின் ப்ரைம் ஸ்பின்னரான வனிந்து ஹசரங்கா. இலங்கை அணியில் டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எடுத்த ஒரே வீரராக மலிங்கா இருந்து வந்தார்.

தல தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா..!

தற்போது, அவரை தொடர்ந்து வனிந்து ஹசரங்காவும் டி20-யில் மிக விரைவில் இந்த மைல்கல்லை எட்டி உள்ளார்.  இலங்கையில் சுற்று பயணம் மேற்கொண்டு வரும் ஆப்கானிஸ்தான் அணி 1 டெஸ்ட் போட்டி, 3 ஓடிஐ (ODI) போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அதில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை (ODI) 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி உள்ளது.

மேலும், தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதோடு, தொடரை கைபற்றியும் உள்ளது. இதில், நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இலங்கை அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய ஹசாரங்கா 4 ஓவர்கள் வீசி 19 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இந்த போட்டியில் கைப்பற்றிய 2 விக்கெட்டுகளின் மூலம் டி20 போட்டிகளில் 101 விக்கெட்டுகளை எடுத்து மலிங்காவிற்கு அடுத்த படியாக டி20 போட்டிகளில் 100 விக்கெட்டை கடந்த இலங்கையின் இரண்டாவது வீரரென பெருமைக்குள்ளனார் வனிந்து ஹசரங்கா. மலிங்கா தனது 76-வது டி20 போட்டியில் 100-வது டி20 விக்கெட்டை எடுத்தார். ஆனால், ஹசாரங்கா தனது 63-வது டி20 போட்டியிலேயே 101 டி20 விக்கெட்டை வேகமாக கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Recent Posts

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

9 minutes ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

34 minutes ago

Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…

53 minutes ago

பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…

57 minutes ago

ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!

ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…

1 hour ago

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

3 hours ago