சென்னை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு பிறகு வெற்றி பெற்ற அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் போட்டியை குறித்து பேசி இருந்தார்
ஐபிஎல் தொடரின் 64-வது போட்டியாக நேற்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதன் காரணமாக பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணியின் இளம் அதிரடி வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் ரன்ஸ் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து விளையாடிய அபிஷேக் போரல் சிறப்பாக விளையாடி 33 பந்துக்கு 58 ரன்கள் எடுத்து டெல்லி அணிக்கு வலு சேர்த்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி 20 ஓவருக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய லக்னோ அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற நிக்கோலஸ் பூரன் மற்றும் அர்ஷத் கானின் அதிரடியால் லக்னோ அணி சற்று சரிவிலிருந்து மீண்டது இருந்தாலும் அணியில் வேறு யாரும் சிறப்பாக விளையாடாததால் லக்னோ அணி 20 ஓவருக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது.
லக்னோ அணியில் அதிரடியாக விளையாடிய பூரன் 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். இந்த ஐபிஎல் தொடரில் தங்களது 14 போட்டிகளை விளையாடிய முதல் அணியாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி இருந்து வருகிறது. நேற்று நடைபெற்ற லக்னோ அணியுடனான இந்த போட்டியே டெல்லி அணிக்கு லீக்கின் கடைசி போட்டியாகும். இந்த போட்டி முடிந்த பிறகு வெற்றி பெற்ற அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் வெற்றி பெற்றதை குறித்தும், இந்த ஐபிஎல் சீசனை குறித்தும் பேசி இருந்தார்.
அவர் பேசிய போது, “இந்த போட்டியில் பூரன் எங்களுக்கு சில கஷ்டத்தை கொடுத்தார், அவருக்கு எதிராக எங்களிடம் சில திட்டங்கள் இருந்தன அது போதுமானதாக இருந்தது. அவருக்கு நாங்கள் தொடர்ந்து நல்ல பந்துகளை வீசினோம். மேலும், இந்த சீசனின் ஆரம்பம் எங்களுக்கு நிறைய நம்பிக்கையுடன் இருந்தது என்று கூறுவேன்.
மேலும், அணியில் சில வீரர்களுக்கு காயங்கள் இருந்தது. தற்போது, கடைசி ஆட்டத்திற்குப் பிறகும் நாங்கள் இன்னும் பிளே ஆஃப் வாய்ப்பின் விளிம்பில் உள்ளோம். இன்னும் ஒரு போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்திருந்தால் எங்களுக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு இருந்துருக்கும். மேலும், தனிப்பட்ட முறையில் என்னை பற்றி கூற வேண்டும் என்றால் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்து விளையாடியது அருமையாக இருந்தது.
அதை தொடர்ந்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் ஆதரவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் எப்போதும் களத்தில் இருக்க விரும்புகிறேன் மேலும் நான் எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிட விரும்பவில்லை”, என்று போட்டி முடிந்த பிறகு டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசி இருந்தார்.
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…