#NZvsAUS : 100வது வெற்றியுடன் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி .!
நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான 3டி 20 போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டி கொண்ட சுற்று பயணத்தொடர் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கியது. நடந்து முடிந்த இந்த டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. இதனால், ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்ற முனைப்பில் நியூஸிலாந்து அணி இருந்தது.
Read More :- #INDvsENG : அஸ்வின் – குலதீப் அசத்தல் ..! இந்தியா அணிக்கு 192 ரன்கள் இலக்கு ..!
இன்று நடைபெற்ற இந்த தொடரின் 3-வது மட்டும் கடைசி டி20 போட்டியானது ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி வீரர்கள், ரன்களை பவுண்டரிகள் மூலம் சேர்த்தாலும் நிலைத்து விளையிடாமல் போனதால் அந்த அணி 10.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்திருந்தது.
அந்நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்று நேரம் நிறுத்தபட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு மழை நின்றதால் டிஎல்எஸ் (DLS) முறைப்படி ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் நிறுத்தப்பட்டு, 10 ஓவர்கள் குறைக்கப்பட்டு நியூஸிலாந்து அணிக்கு 126 ரன்களை இலக்காக (DLS Target) நிர்ணையித்தனர். இதனால் 10 ஓவர்களில் 127 ரன்கள் என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்கியது.
Read More :- ரூ. 2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக பிரமுகர் கட்சியில் இருந்து நிரந்தர நீக்கம்
நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களின் மோசமான ஆட்டத்தாலும், ஆஸ்திரேலியா அணியின் சிறப்பான பந்து வீச்சாலும் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகள் அடிக்க முடியாமல் திணறினர். நியூஸிலாந்து அணியின் க்ளென் பிலிப்ஸ் தனியாக நின்று 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து போராடினர், இருப்பினும் அவரது போராட்டம் நியூஸிலாந்து அணிக்கு உதவாமல் போனது. இறுதியில், நியூஸிலாந்து அணி 10 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து வெறும் 98 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதன் மூலம், ஆஸ்திரேலியா அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று. 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. இந்த 3-வது டி20 போட்டியின் வெற்றியின் மூலம், சர்வதேச டி20I போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு இது 100-வது டி20I வெற்றியாக அமைந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் வருகின்ற பிப்ரவரி 29-ம் தேதி பேசின் ரிசர்வ் மைதானத்தில் தொடங்கவுள்ளது.