முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்.. சாதனை படைத்த உனத்கட்!
ரஞ்சி போட்டியின் முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்த உனத்கட்.
ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்து முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் ஜெய்தேவ் உனத்கட். அதாவது, சௌராஷ்டிரா அணியின் கேப்டன் ஜெய்தேவ் உனத்கட், ரஞ்சி கோப்பை போட்டியின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற வரலாறு படைத்தார்.
ரஞ்சி டிராபி போட்டியில் உனத்கட் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது பந்துகளில் டெல்லியின் துருவ் ஷோரே, வைபவ் ராவல் மற்றும் யஷ் துல் ஆகியோர் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். கடந்த மாதம் உனத்கட், 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்காக டெஸ்டில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.