ஹாட்ரிக் தோல்வி .. இந்த 3 மாற்றத்தை மும்பை செய்தால் வெற்றி உறுதி ..! என்னென்ன தெரியுமா ?

Mumbai Indians [file image]

ஐபிஎல் 2024 : நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி தொடர்ந்து 3 தோல்விகளை பெற்றுள்ளது. இதனால், இந்த 3 மாற்றத்தை மும்பை அணி செய்தால் வெற்றி வாய்ப்பு கூடலாம்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வலுவான அணியாக திகழ்ந்து வருகிறது. ஆனால், இந்த 2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணி தொடர்ந்து 3 தோல்விகளை தழுவி உள்ளது. இதனால், மும்பை அணி ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். ஏற்கனவே மும்பை அணியில் கேப்டன் சர்ச்சை சலசலப்பாக பேசி கொண்டிருக்கையில், தற்போது இந்த ஹாட்ரிக் தோல்வி மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடேயே மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அதனால், மும்பை அணியில் இந்த 3 மாற்றத்தை செய்தால் மும்பை அணிக்கு வெற்றி கிடைக்கும் என மும்பை ரசிகர்கள் சமூகத்தளத்தில் கூறி வருகின்றனர். அது என்னனென்ன மாற்றம் என்பதை தற்போது நாம் இதில் பார்க்கலாம். இதில் முதலாவதாக தென்னாபிரிக்கா அணியின் இளம் வீரரான குவேனா மபகாவை விளையாடும் 11 வீரர்கள் அணியில் இருந்து நீக்கி விட்டு அவருக்கு பதிலாக இலங்கை நட்சத்திர வீரரான நுவன் துஷாராவை அணியில் எடுக்கலாம் என்று மும்பை ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதில் 2-வது முக்கிய மாற்றமாக மும்பை ரசிகர்கள் கூறுவது என்னவென்றால், அணியில் 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கும் டிம் டேவிட் 3-வது அல்லது 4-வது விக்கெட்டுக்கு களமிறங்க வேண்டும் என்பது தான். டிம் டேவிட், ஆஸ்திரேலியா அணியின் அட்டகாசமான அதிரடி வீரர் ஆவார். அவரை 8-வது விக்கெட்டுக்கு விளையாட வைப்பது என்பது சற்று உறுத்தலாகவே மும்பை அணிக்கு இருந்து வருவதாக மும்பை ரசிகர்கள் கூறுவதோடு, இந்த மாற்றத்தை மும்பை அணி ரசிகர்கள் சுட்டி காட்டி கொண்டும் வருகின்றனர்.

இறுதியாக, 3-வது மாற்றமாக பும்ராவை தகுந்த இடத்தில் உபயோகிக்க வேண்டும் என்று மும்பை அணி ரசிகர்கள் கூறி வருகின்றனர். பும்ரா ஒரு அட்டகாசமான  அதிரடி செய்யும் பவுலர் ஆவார். அவரை விக்கெட் தேவை படும் போதும், பவர்பிளேவிலும், டெத் ஓவர்களிலும் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார்கள் மும்பை ரசிகர்கள். இந்த 3 மாற்றத்தை அல்லது வேறு ஏதாவது மாற்றத்தை மும்பை அணி செய்தால் மட்டுமே இந்த தொடர் தோல்வியிலுருந்து மீள முடியும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்