டி20 உலகக் கோப்பையில் கேட்சை கைவிட்ட ஹசன் அலி- இரண்டு நாட்களாக தூங்கவில்லை..!
டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் தான் கைவிட்ட கேட்ச் சோகத்தில் இருந்து வெளியே வர நிறையப் போராட வேண்டியிருந்தது. இரண்டு இரவுகள் சரியாக தூங்கவில்லை என பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2021 அரையிறுதியில் மேத்யூ வேட்டின் கேட்ச்சை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி முக்கியமான தருணத்தில் கைவிட்டார். ஹசன் அலியின் கேட்சை கைவிட்டதால் மேத்யூ வேட் அபாரமாக ஆடி ஆஸ்திரேலிய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் இடம்பிடித்தது, அங்கு நியூசிலாந்தை தோற்கடித்து முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது.
பாகிஸ்தானின் தோல்விக்குப் பிறகு ஹசன் அலி சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தற்போது இந்த விவகாரத்தில் ஹசன் அலியின் கருத்து வெளியாகியுள்ளது. இது குறித்து வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கிரிக்கெட் பாகிஸ்தானின் யூடியூப் சேனலில் கூறியதாவது, இதை நான் இதுவரை யாரிடமும் சொன்னதில்லை. போட்டி முடிந்ததும் டிரஸ்ஸிங் ரூமில் அழுது கொண்டிருந்ததாக ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் அவர் கைவிட்ட கேட்ச் சோகத்தில் இருந்து வெளியே வருவதற்கு நிறையப் போராட வேண்டியிருந்தது. இரண்டு இரவுகள் சரியாக தூங்க முடியவில்லை. என் மனைவி என்னுடன் இருந்தாள், நான் தூங்காததால் அவள் பதற்றமாக இருந்தாள். அவள் என்னைப் பற்றி மிகவும் கவலைப்பட்டாள் என தெரிவித்தார்.