ஐபிஎல் பார்ப்பவர்கள் குறைந்து விட்டார்களா…? காரணம் என்ன..?
தொலைக்காட்சிகளில் ஐபிஎல் நிகழ்ச்சியயை பார்ப்பவர்கள் குறைந்து விட்டதாக இன்சைடு ஸ்போர்ட்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் தொலைக்காட்சிகளில் ஐபிஎல் பார்ப்பவர்களின் புள்ளி பட்டியலை இன்சைட்ஸ் ஸ்போர்ட்ஸ் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அதன்படி ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 8 போட்டிகளுக்கான தர வரிசை அட்டவணையில் 2.52 அளவில் உள்ளது.
இது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 30 சதவீதம் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் தொடக்க வாரத்தில் தொலைக்காட்சிகளில் ஐபிஎல் பார்ப்பவர்களின் ரேட்டிங் 3.75 மட்டுமே இருந்ததாகவும், இது 2020 ஆம் ஆண்டில் இருந்த ரேட்டிங் 3.85 ஐ விட குறைவாக உள்ளதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய ரசிகர்களுக்கு மிக விருப்பமுள்ள இரண்டு அணிகளுமே தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருவதால், இந்த இரு அணிகளுக்காக ஐபிஎல் நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்கக் கூடிய ரசிகர்கள் ஐபிஎல் நிகழ்ச்சியை பார்ப்பதை குறைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.