மும்பை அணி 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 111 ரன்கள் எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இன்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற 39-வது போட்டியில் சென்னை vs கொல்கத்தா இடையேயான போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, மற்றோரு போட்டியான பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடியது. இதில், டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் விராட் கோலி, தேவதூத் படிக்கல் களமிறங்கியனர். ஆனால், வந்த வேகத்தில் படிக்கல் டக் அவுட்டானார். நிதானமாக விளையாடி வந்த கோலி 51 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார்.
இவரை தொடர்ந்து ஸ்ரீகர் பாரத் 32 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் மேக்ஸ்வெல் 56 ரன்கள் அடித்து வெளியேற இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து165 ரன்களைஎடுத்து. மும்பை அணியில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, குயின்டன் டி காக் இருவரும் களமிறங்க சிறப்பான ஆட்டத்தை விளையாடினர்.
நிதானமாக விளையாடிய வந்த குயின்டன் டி காக் 24 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க பின்னர் இஷான் கிஷன் களமிறங்க சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்னில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்த்தை கொடுத்தார்.
பின்னர் களம் கண்ட வீரர்கள் நிலைத்து நிற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஷான் கிஷன் 9, சூர்யகுமார் யாதவ் 8 , க்ருனால் பாண்டியா 5 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால், மும்பை 95 ரன் எடுத்து 5 விக்கெட்டை இழந்து இருந்தது. ஆனால், களத்தில் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா இருவரும் இருந்ததால் மும்பை அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எதிர்பார்ப்பை 17 ஓவரில் ஹர்ஷல் படேல் மாற்றினார்.
காரணம் ஹர்ஷல் படேல் அந்த ஓவரில் ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட்,
ராகுல் சாஹர் ஆகிய மூன்று பேரை தொடர்ந்து விக்கெட்டை வீழ்த்தி ஹாட்ரி விக்கெட்டை பறித்தார். இறுதியாக மும்பை அணி 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 111 ரன்கள் எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பெங்களூர் அணியில் ஹர்ஷல் படேல் 4, யுஸ்வேந்திர சாஹல் 3, க்ளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டை பறித்தனர்.
இப்போட்டியில் பெங்களூர் வெற்றி பெற்றதால் தொடர் 2 தோல்விக்கு பிறகு வெற்றி பெற்று 12 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை தக்க வைத்தது. அதே நேரத்தில் மும்பை அணி ஹாட்ரி தோல்வியை தழுவியுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…