IPL 2024 : ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஆரி புரூக் ! டெல்லி அணி அதிருப்தி ..!
IPL 2024 : இங்கிலாந்து அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஆரி புரூக் சமீபத்தில் சில தொடரிலுருந்து இங்கிலாந்து அணியில் இருந்து விலகினார். முதலில் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த ஆரி புரூக் அதன் பிறகு கடைசி நிமிடத்தில் டெஸ்ட் அணியில் இருந்து தனிப்பட்ட காரணத்திற்காக விலகினார். மேலும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) ஆரி புரூக் குடும்பத்தினருக்கு தேவைப்பட்டதை செய்து கொடுத்தது.
Read More :- ICC : பும்ராவை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்த அஸ்வின் !
அதை தொடர்ந்து, இவர் தற்போது இந்த ஆண்டு மார்ச் 22-ம் தேதி நடைபெற இருக்கும் ஐபிஎல்-2024 தொடரிலிருந்து அதே போல தனிப்பட்ட காரணத்திற்காக வெளியேறி உள்ளார். இவர் இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியால் ரூ. 4 கோடி-க்கு ஏலத்தில் எடுக்கபட்டார். தற்போது, அவர் விலகியதால் அதற்கான மாற்று வீரரை தேடும் பணியில் டெல்லி கேபிட்டல்ஸ் நிர்வாகம் இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆரி புரூக் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. 2023-ம் ஆண்டின் ஐபிஎல் சீசனில் 13.25 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஆரி புரூக் வாங்கப்பட்டார். சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், வெறும் 21 என்ற குறைந்த சராசரியில், 190 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி அவரை 2024- ஐபிஎல் ஏலத்திற்கு முன் அவரை விடுவித்தனர. இதன் மூலம், டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை ரூ.4 கோடிக்கு 2024- ஐபிஎல் தொடருக்காக வாங்கியது.
Read More :- IPL 2024 : ‘ சிஎஸ்கே அணியில் இதுதான் குறை ‘ – ஆகாஷ் சோப்ரா !
தனிப்பட்ட காரணங்களுக்காக இப்படி ஒவ்வொரு வீரர்கள் விலகும் இந்த போக்கானது ஐபிஎல் அணி உரிமையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற எதிர்பாராத திடீர் விலகளால் இது அவர்களின் ஏலத் திட்டத்தை சீர்குலைப்பதாக கூறி ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (BCCI) இந்த பிரச்சினையை தீர்க்க பரிசீலித்து வருகின்றனர்.