தடை நீக்கப்பட்ட 2 வீரர்களில் ஒருவர் மட்டும் நியுஸிலாந்து செல்கிறார்!!
தடை நீக்கப்பட்ட நியூசிலாந்து அணியுடனான நடப்பு கிரிக்கெட் தொடரில் தன்னையும் சேர்த்து கொள்ளுமாறும், தனக்கு விளையாட வாய்ப்பு கொடுக்குமாறும் பி.சி.சி.ஐ.,யிடம் ஹர்திக் பாண்டியா கோரிக்கை வைத்துள்ளார்.
பி.சி.சி.ஐ., இவரது கோரிக்கையை பரிசீலித்து ஏற்கும் பட்சத்தில் ஹர்திக் பாண்டியா மூன்றாவது அல்லது நான்காவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
அதே போல், இவருடன் சர்ச்சையில் சிக்கிய மற்றொரு வீரரான கே.எல் ராகுல் இந்திய ஏ அணியில் இணைந்து விளையாட உள்ளார்.