ஹர்திக்கிற்கு கேப்டன் பதவிலாம் வேணாம்.. மாறாக அவருக்கு குடுங்க ..! இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பேச்சு !!
லால்சந்த் ராஜ்புத் : இந்திய அணி தற்போது இலங்கை அணியுடனான சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட போது பல தரப்பினரிடையே பல கேள்விகள் எழுந்தது. அதில் ஒன்று தான் ‘டி20 உலகக்கோப்பையில் துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை அந்த பதவியில் இருந்து தூக்கிவிட்டு சூரியகுமார் யாதவை இந்திய டி20 அணியின் கேப்டனாகவும், சுப்மன் கில்லை துணை கேப்டனாகவும் எதற்காக அறிவித்தனர்’ எனபது தான்.
சர்வேதச டி20 போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையில், அப்போதே துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா தான் அணியை தலைமை தாங்கி இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இலங்கை அணியுடனான தொடரில் அவரை துணை கேப்டனாக கூட பணியமர்த்தவில்லை என ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்.
தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான லால்சந்த் ராஜ்புத் ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பேட்டி ஒன்றில், டி20I கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை விட சூர்யகுமார் யாதவை தேர்வு செய்ததன் மூலம் நிர்வாகம் புத்திசாலித்தனமான முடிவை எடுத்ததாக நம்புகிறார்.
இது குறித்து பேசிய அவர், “பயிற்சியாளர் வரிசையில் தேர்வாளர்களும் இது குறித்து யோசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது பயிற்சியாளரின் புத்திசாலித்தனமான முடிவு என்று நான் நினைக்கிறன். ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட வேண்டும் என பிசிசிஐ விரும்புகிறது.
இதனால், அவரை கேப்டன் பதவியில் இருந்து விடுவித்தால், அவர் சுதந்திரமாக விளையாடி, பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அவரால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். டி20 மட்டும் அல்லாது அனைத்து விளையாட்டிலும் விளையாட தகுதியான கேப்டன் தேவை.
அது சூர்யகுமார் யாதவிடம் நன்றாக இருக்கிறது. மேலும், சூர்யா ரஞ்சி கோப்பையில் மும்பை அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார் மற்றும் டி20 வடிவத்தில் நன்றாகவும் விளையாடுவார். அவர் இந்திய அணியை சிறந்த முறையில் வழிநடத்துவார்”, என்று லால்சந்த் ராஜ்புத் கூறி உள்ளார்.