ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா எதிரான தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்..?

 

உலகக்கோப்பையில் காயம்:

நடப்பு உலகக்கோப்பையில் புனேயில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான  லீக்  போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து வெளியேறினார். பின்னர் உலகக்கோப்பையின் தொடரில் இருந்து  வெளியேறினார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அவரது காயம் இன்னும் ஆறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் குறித்து மருத்துவக் குழு முடிவு எடுக்க வேண்டும். விரைவில் அவருக்கு கணுக்கால் அறுவை சிகிச்சையும் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹர்திக் பாண்டியா விலகல்:

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரும், டி20 கேப்டனுமான ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் விளையாடும் தொடரிலும் இருந்து விலகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 23 முதல் டிசம்பர் 3 வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதே நேரத்தில் இந்திய அணி டிசம்பர் 10-ம் தேதி முதல் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

மூத்த வீரர்களுக்கு ஓய்வு:

உலகக்கோப்பையில் பங்கேற்கும் பெரும்பாலான வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஓய்வளிக்கப்படும் என்று கூறப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில், இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் அல்லது ருதுராஜ் கெயிக்வாட் கேப்டனாக செயல்படலாம் என கூறப்படுகிறது. ருதுராஜ் கெயிக்வாட் தலைமையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.

மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடிய வீரர்களான  ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜித்தேஷ் சர்மா ஆகியோரும் இந்த அணியில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா டி20 தொடர் அட்டவணை:
நவம்பர் 23: 1-வது டி20 போட்டி
நவம்பர் 26: 2-வது டி20  போட்டி
நவம்பர் 28: 3-வது டி20  போட்டி
1 டிசம்பர்: 4-வது டி20  போட்டி
3 டிசம்பர்: 5-வது டி20  போட்டி

தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய சுற்றுப்பயணம்:

10 டிசம்பர்: 1-வது டி20 போட்டி
12 டிசம்பர்: 2-வது டி20 போட்டி
டிசம்பர் 14: 3-வது டி20  போட்டி
17 டிசம்பர்: 1-வது ஒருநாள் போட்டி
19 டிசம்பர்: 2-வது ஒருநாள் போட்டி
21 டிசம்பர்: 3-வது ஒருநாள் போட்டி
26 டிசம்பர்–30 டிசம்பர்: 1-வது டெஸ்ட்  போட்டி
3 ஜனவரி–7 ஜனவரி: 2-வது டெஸ்ட்  போட்டி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்