நியூசிலாந்து உடனான போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார் – பிசிசிஐ

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் நேற்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்று 17ஆவது லீக் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் விளையாடியது. இதில், வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 256 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 41.3 ஓவரில் 261 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டில் வங்கதேச அணி பேட்டிங் செய்யும்போது இப்போட்டியின் 9வது ஓவரை இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா வீசி வந்தார். அப்போது ஹர்திக் பாண்டியா ஓவரில் பவுண்டரிகள் சென்றது.
முதல் மூன்று பந்துகளை வீசிய நிலையில், ஹர்திக் பாண்டியா திடீரென்று கீழே விழுந்து வலியால் துடித்தார். அங்கிருந்து மருத்துவக்குழுவினர் களத்திற்கு வந்து ஹார்திக் பாண்டியாவை பரிசோதித்தனர். அதன்பிறகு ஹார்திக் பாண்டியா பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வலி தாங்க முடியாததால் பெவிலியன் சென்றார். ஹார்திக் பாண்டியா ஓவரில் மீதமுள்ள பந்துகளை விராட் கோலி வீசி முடித்தார்.
இதையடுத்து, ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்து தற்போது சோதிக்கப்பட்டு ஸ்கேன் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்திருந்தது. இப்போட்டியின் மூலம் இந்தியா உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் நான்காவது வெற்றியை பதிவு செய்தது. நாளை மறுநாள் தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியதில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.
இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார் என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் தொடர்ந்து பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பார். இதனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார். இலங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா.
லேட்டஸ்ட் செய்திகள்
AUSvENG : முடிஞ்சா தொட்டுப்பார்.! வெளுத்து வாங்கிய பென் டக்கெட்! ஆஸி.க்கு இமாலய இலக்கு!
February 22, 2025
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025