இந்த டிவிஸ்ட எதிர்பாக்கல ..! ஆர்சிபி-யில் இணையும் ஹர்திக் பாண்டியா?

Hardik Pandya

ஐபிஎல் :  இந்தியாவில் ஆண்டுதோறும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் தொடர் தான் ஐபிஎல். இந்த தொடரை பற்றிய தகவல்கள், தொடர் நடைபெறும் போதும் சரி, அது முடிந்த பிறகு சரி, வந்து கொண்டே இருக்கும். மேலும், அடுத்த வருடம் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கிறது.

அதற்கான கூட்டமும் சமீபத்தில் நடைபெற்று, ஒரு சில ஸ்வாரஸ்யமான தகவலகள் வெளியானது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அனைத்து அணியும் RTM செய்யும் விதியை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக ஒரு தகவல் பரவி வந்தது.

இதே போல ஒரு தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது, அது என்னவென்றால் மும்பை அணியின் தற்போதைய கேப்டனான ஹர்திக் பாண்டியா பெங்களூரு அணிக்கு செல்ல இருப்பதாக ஒரு தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஏற்கனவே இந்த ஆண்டுக்கான அதாவது 2024-ல் ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்னரே மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களால் பெரிதும் வெறுக்கப்பட்டதென்றே கூறலாம். பல வருடங்கள் அணியின் கேப்டனாக இருந்து 5 கோப்பைகளை வென்ற ஒரு வெற்றிக் கேப்டனாக வலம் வந்த ஒரு ரோஹித் ஷர்மாவை தூக்கி விட்டு பாண்டியவை கேப்டனாக அமர்த்தியது யாருக்கும் பிடிக்கவில்லை.

மேலும், போட்டியின் போதும் ஹர்திக் பாண்டியா ரோஹித் ஷர்மாவை அங்கும் இங்கும் ஃபீல்டிங் செய்ய வைத்ததும் ரசிகர்களுக்கு ஏற்று கொள்ள முடியாத வண்ணமே இருந்தது. அதன்பின் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு ரோஹித் சர்மா மும்பை அணியில் இருந்து வேறு ஒரு அணிக்கு செல்ல இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

தற்போது, மும்பை அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியவை விடுவிக்க உள்ளதாகவும், அவரை பெங்களூரு அணி எடுக்க உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

அதே போல பெங்களூரு அணி, ஹர்திக் பாண்டியாவை எடுத்தால் அவரை அணியின் கேப்டனாகவும் நியமிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், பெங்களூரு அணியின் தற்போதைய கேப்டனான டு பிளெஸ்ஸியை பெங்களூரு அணி விடுவிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் இதனுடன் பரவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
mk stalin and Dharmendra Pradhan
dharmendra pradhan Kanimozhi
Srivanigundam - School Student
Dharmendra Pradhan
next icc tournament
gold price