நான் இதை நினைத்துக்கூட பார்க்கவில்லை…தோல்விக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா!

Hardik Pandya

Hardik Pandya: இவ்வளவு பெரிய ஸ்கோரை ஐதராபாத் அணி எடுக்கும் என்று நான் நினைக்கவில்லை என மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறினார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணியும், மும்பை அணியும் மோதியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த போட்டி மிக பிரமாண்டமாக இருந்தது. இந்த ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகள் அரங்கேறியுள்ளது. அதாவது, முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, ஆரம்ப முதலே காட்டுத்தனமாக விளையாடி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 என்ற இதுவரை இல்லாத அதிகபட்ச ஸ்கோரை எடுத்தது.

இதன்பின் மிகப்பெரிய இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியும் கடைசி வரை தாறுமாறாக விளையாடியது. இருப்பினும், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து, 246 ரன்களை எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஐபிஎஸ் வரலாற்றிலேயே இந்த 277 ரன்கள் தான் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். அதுமட்டுமில்லாமல், ஒரு போட்டியில் 500 ரன்கள் கடந்துள்ள நிலையில், அதிக சிக்சர்களும் இந்த போட்டியில் தான் அதிகம். இதுபோன்று பல்வேறு சாதனைகள் இந்த ஒரு போட்டியின் மூலம் நிகந்துள்ளது. எனவே, இந்த தோல்விக்கு பிறகு மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது, டாஸ் வென்ற போது 277 ரன்களை ஹைதராபாத் எடுக்கும் என்று நான் உண்மையில் நினைக்கவில்லை.

இந்த விக்கெட் நன்றாக இருந்தது. நாங்கள் எப்படி பந்து வீசினோம் என்று சொல்வதை விட, ஐதராபாத் அணி வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள் என சொல்லலாம். இதனால் எதிரணி ஒரு பெரிய இலக்கை நிர்ணயம் செய்தது. பின்னர் பந்துவீச்சில் எதிரணி சிறப்பாக செயல்பட்டது. அது எங்களுக்கு கடினமாக இருந்தது. இந்த போட்டியில் 500 ரன்கள் கடந்திருப்பது பார்க்கும்போது இந்த விக்கெட் பேட்டர்களுக்கு பெரிதும் உதவியது என்றே கூறலாம்.

இப்போட்டியில் நாங்கள் சில விஷயங்களை செய்து பார்த்திருக்க வேண்டும். ஆனால், இளம் பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள எங்கள் அணி, இப்போட்டியின் மூலம் நிறைய கற்றுக்கொள்வோம் என்றார். மேலும் அவர் கூறியதாவது, பந்துகள் பலமுறை பவுண்டரி லைனை தாண்டி ரசிகர்களை நோக்கி சென்றது. இதனால் உரிய நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்க நேரம் எடுக்கும் என்ற கூறிய ஹர்திக் பாண்டியா, எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களின் செயல்பாடு நன்றாகவே இருந்தது எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்