தொடர் நாயகன் விருதை நடராஜனிடம் கொடுத்த ஹர்திக் பாண்டியா..!

Default Image

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடரில் விளையாடியது. இன்று கடைசி போட்டி நடைபெற்றது. இன்றைய போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதனால், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டியிலும் இந்திய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இரண்டாவது டி 20 போட்டியின் போது ஹர்திக் பாண்டியா 22 பந்தில் 42 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணிக்கு 195 இலக்கு வைக்கப்பட்டது, அதில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா  ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் பந்தை அடித்து நொறுக்கினார்.

கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டேனியல் சாம்ஸின் வீசினார். 6 பந்தில் 14 ரன்கள் தேவைப்பட்டதை அடுத்து ஹர்திக் பாண்டியா இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 2 ரன்கள் எடுத்து 2 வது போட்டியில் வெற்றிபெறச் செய்து இந்தியா தொடரை கைப்பற்ற உதவினார். இந்நிலையில், இன்று 3-வது போட்டி முடிந்தபிறகு ஹர்திக் பாண்டியாவிற்கு மேன் ஆஃப் தி சீரிஸ் விருது வழங்கப்பட்டது.

பின்னர், பேசிய ஹர்திக் பாண்டியா நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், தொடர் நாயகன் விருதைப் பெறுவதில் கவலையில்லை, ஆனால் அது ஒரு குழு முயற்சி. 2 வது ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு இது ஒரு 4 போட்டிகள் கொண்ட தொடராக நாங்கள் என்று நினைத்தோம், நாங்கள் பெற முடிந்தது மூன்று வெற்றிகள், அதில் மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கப்பட்ட மேன் ஆஃப் தி சீரிஸ் விருதை  தமிழக வீரர் நடராஜனுக்கு வழங்கினார். நடராஜன், நீங்கள் இந்த தொடரில் சிறந்து விளையாடினீர்கள். அறிமுகமான கடினமான சூழ்நிலைகளில் அற்புதமாக செயல்பட உங்கள் திறமை மற்றும் கடின உழைப்பின் அளவைப் பேசுகிறது. நீங்கள் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் சகோதரா என ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்