ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மாவின் அசத்தலான சாதனையை நெருங்கியுள்ளார்.

hardik pandya rohit sharma

புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் 4வது போட்டி நடைபெற்ற நிலையில், இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்தியா அணி

இந்த போட்டியில், ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடினார். 30 பந்துகளில் அரை சதம் விளாசி தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தார். ஏனென்றால், மூன்றாவது போட்டியில் அவர் டி20 போட்டியில் விளையாடியது போல் விளையாடவில்லை எனவும், அவர் மெதுவாக விளையாடியது தான் தோல்விக்கு காரணம் எனவும் நெட்டிசன்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் விமர்சனம் செய்திருந்தார்கள்.

எனவே, அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 4-வது போட்டியில் சிறப்பாக விளையாடினார். 4-வது போட்டியில் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது மட்டுமின்றி ஹர்திக் பாண்டியா இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவின் சாதனையையும் முறியடிக்கும் விளிம்பிற்கு வந்துள்ளார். அது என்னென்ன சாதனைகள் என்பது பற்றி பார்ப்போம்.

அதன்படி, டி20 போட்டியில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்த கேப்டன் ரோஹித் சர்மா  இங்கிலாந்துக்கு எதிராக 15 இன்னிங்ஸ்களில் 467  ரன்களைக் குவித்துள்ளார். அவருடைய அந்த சாதனையை தான் ஹர்திக் பாண்டிய தற்போது நெருங்கியுள்ளார். அவர், இங்கிலாந்துக்கு எதிராக 17 இன்னிங்ஸ்களில் 31.15 சராசரியாகவும், 148.35 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 405 ரன்கள் எடுத்துள்ளார்.

5-வது போட்டியும் மீதம் இருப்பதன் காரணமாக அந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றால் அந்த போட்டியில்  ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்துவிடுவார் என கூறப்படுகிறது. மேலும், அந்த சாதனையை அவர் முறியடிக்கிறாரா? இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 5-வது டி20 போட்டி வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்