ஹர்திக் பாண்டியா : கருத்துவேறுபாடு காரணமாக ஹர்திக் பாண்டியாவும் அவருடைய மனைவியும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும், அவருடைய மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக பரவும் செய்தி தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இப்படியான ஒரு செய்தி பரவுவதற்கான முக்கிய காரணமே நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தனது கணவரின் பெயரை நீக்கியது தான்.
அது மட்டுமின்றி, மும்பை கேப்டனாக பொறுப்பேற்று ஹர்திக் பாண்டியா விளையாடிய நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியில் கூட நடாஷா ஸ்டான்கோவிக் பார்ப்பதற்கு வருகை தரவில்லை. அதுவே ஒரு விமர்சனமாக இருந்த நிலையில், திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹர்திக் பாண்டியாவின் பெயரை நீக்கியுள்ளது விவாகரத்து வதந்தியை தூண்டியுள்ளது.
ஹர்திக் பாண்டியாவும், அவருடைய மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவி கொண்டு இருக்கிறது. இந்த தகவல் உண்மையா அல்லது வெறும் வதந்தி தகவலா? என்பதனை பற்றி இவர்கள் இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டும் தான் தெரியவரும். விரைவில் இதற்கு விளக்கம் அளிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும். ஹர்திக் பாண்டியா செர்பிய நடனக் கலைஞரும், மாடல் அழகியுமான நடாஷா ஸ்டான்கோவிக்கை காதலித்து கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அதே ஆண்டு ஜூலை மாதம், ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு அகஸ்திய பாண்டியன் என்று பெயரும் வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…