ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை – பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை எடுத்தது. இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆனால், பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி இலக்கை நோக்கி வந்தது. இதன்பின்னர் மீண்டும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் இறுதியில் மும்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி 10 விக்கெட்டை இழந்து நூல் இலையில் தோல்வியை சந்தித்தது.
அதன்படி பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் (ஸ்லோ ஓவர் ரேட்) மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் நடத்தை விதிகளின்படி, இந்த சீசனில் மும்பை அணி முதல் முறையாக ஸ்லோ ஓவர் ரேட்டில் பந்துவீசியதால் செய்த முதல் அந்த அணியின் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக, இது தொடர்ந்தால் அபராதம் அதிகரிக்கக்கூடும் எனவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார்…
சென்னை: இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்குத் தற்போது…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறை சார்பில் சிறந்த ரயில்வே ஊழியரின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக ரயில் சேவா…
சென்னை :பாரம்பரியமிக்க மோர் களி செய்வது எப்படி என பார்க்கலாம் .. தேவையான பொருள்கள்: தயிர்= இரண்டு ஸ்பூன் மோர்=…
உடலில் ரத்த சிவப்பு செல்களின் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை இந்த செய்தி…
சென்னை : அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த நவம்பர் 10 முதல் 17ஆம் தேதி வரையில், 6வது உலக…