HardikPandya : குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரஷித் கானை ஹர்திக் பாண்டியா எதிர்கொள்ள விரும்பவில்லை என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் : குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து. அதனை தொடர்ந்து 169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்தில் நன்றாக விளையாடி வந்தது.
பலரும் மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெற்றிபெறும் என நினைத்து கொண்டு இருந்த சமயத்தில் 20 ஓவருக்கு 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, இந்த போட்டி பாதிக்கப்பட்ட காரணம் ஹர்திக் பாண்டியா தான் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய இர்பான் பதான் ” மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியின் இலக்கை அவர்கள் துரத்தும்போது தொடர்ச்சியாக விக்கெட் விடாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதைப்போல, டிம் டேவிட்டை தவறான இடத்தில் இறக்கிவிட்டார்கள். ரஷித் கானுக்கு ஒரு ஓவர் மீதம் இருந்தபோது விக்கெட் விழுந்தவுடன் ஹர்திக் பாண்டியா வருவார் என எதிர்பார்த்தோம்.
ஆனால், அவர் வராமல் டிம் டேவிட் வந்தார். ஒருவேளை நீண்ட மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ஹர்திக் பாண்டியா ரஷித் கானை எதிர்கொள்ள விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன். ஒரு அனுபவம் வாய்ந்த இந்திய வீரர் ஒருவர் டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்து வெளிநாட்டு வீரரை ரஷித்துக்கு எதிராக விளையாட அனுப்பி வைத்தது பார்க்கவே தவறாக இருக்கிறது. இதனை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். என்னை பொறுத்தவரை தவறு. அவர் தாமதமாக களமிறக்கியது சற்று போட்டியை பாதித்தது” எனவும் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…