ரஷித் கானை எதிர்கொள்ள ஹர்திக் பாண்டியா விரும்பவில்லை – இர்பான் பதான்!!

rashid khan gt irfan pathan

HardikPandya :  குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரஷித் கானை ஹர்திக் பாண்டியா எதிர்கொள்ள விரும்பவில்லை என இர்பான் பதான்  தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் : குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  முதலில் பேட்டிங் செய்த  குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில்  6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து.  அதனை தொடர்ந்து 169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்தில் நன்றாக விளையாடி வந்தது.

பலரும் மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெற்றிபெறும் என நினைத்து கொண்டு இருந்த சமயத்தில் 20 ஓவருக்கு 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, இந்த போட்டி பாதிக்கப்பட்ட காரணம் ஹர்திக் பாண்டியா தான் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய இர்பான் பதான் ” மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியின் இலக்கை அவர்கள் துரத்தும்போது தொடர்ச்சியாக விக்கெட் விடாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதைப்போல, டிம் டேவிட்டை தவறான இடத்தில் இறக்கிவிட்டார்கள். ரஷித் கானுக்கு ஒரு ஓவர் மீதம் இருந்தபோது விக்கெட் விழுந்தவுடன் ஹர்திக் பாண்டியா வருவார் என எதிர்பார்த்தோம்.

ஆனால், அவர் வராமல் டிம் டேவிட் வந்தார். ஒருவேளை நீண்ட மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ஹர்திக் பாண்டியா ரஷித் கானை எதிர்கொள்ள விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன். ஒரு அனுபவம் வாய்ந்த இந்திய வீரர் ஒருவர் டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்து வெளிநாட்டு வீரரை ரஷித்துக்கு எதிராக விளையாட அனுப்பி வைத்தது பார்க்கவே தவறாக இருக்கிறது. இதனை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். என்னை பொறுத்தவரை தவறு. அவர் தாமதமாக களமிறக்கியது  சற்று போட்டியை பாதித்தது” எனவும் இர்பான் பதான்  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation