பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சால் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா விளம்பர ஒப்பந்தத்தையும் இழந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியினுடைய ஆல்ரவுண்டராக வலம் வருபவர் ஹர்திக் பாண்டியா இவரும் மற்றொரு முன்னணி வீரரான கே.எல்.ராகுலும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பெண்களின் வாழ்க்கை முறை குறித்து மற்றும் இனவெறியைத் தூண்டுகின்ற வகையில் இருவரும் பதிலளித்தனர்.
இவருவர் மீதும் கடுமையான விமர்சனங்கள் நாடு முழுவதும் வந்ததை அடுத்து முன்வந்து தன் தவறுக்காக ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார்.ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு முதற்கட்டமாக ஒழுங்கு நடவடிக்கையாக இருவருக்கும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை விதித்ததுடன் இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை பின்னர் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
பிசிசிஐ நடவடிக்கை காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் பங்கேற்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இருவரும் உடனடியாக நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டதுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சனை இடையில் பிரபல தனியாா் நிறுவனம் ஒன்றில் விளம்பரத் தூதுவராக ஹா்திக் பாண்டியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.ஆனால் தற்போது அந்த ஒப்பந்தத்தில் இருந்து அவர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்ச்சை பேச்சால் கிரிக்கெட் மற்றும் தனது இதர வாழ்க்கையிலும் அடிமேல் அடி விழுவதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…