ஹர்திக் பாண்டியா : நடைபெற்று வந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி கோப்பையை வென்று ஒரு வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அந்த வெற்றியின் கொண்டாட்டம் தற்போது வரை இந்திய அணி வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்கு இந்திய அணியில் விளையாடிய அனைத்து வீரர்களும் அவர்களது முழு பங்களிப்பை கொடுத்தார்கள்.
அதிலும் குறிப்பிட்டுச் சொன்னால் ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிலும் இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா ஒரு ஆல் ரவுண்டராக 11 விக்கெட்டுகளும், 144 ரன்களும் குவித்து அசத்தி இருக்கிறார். இந்த தொடரில் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கும் போதெல்லாம் தனது திறமையை சரியாக பயன்படுத்தி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்திருக்கிறார்.
மேலும், இந்திய அணி துணை கேப்டன் ஆகும் ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் செயலாற்றினார். தற்போது, இந்த தொடர் முடிவடைந்த பிறகு நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வேதச டி20 போட்டியிலிருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தனர். அதன்பின் ஹர்திக் பாண்டியா தற்போது இந்திய அணியின் டி20 கேப்டனாக செயலாற்றுவார் என்று பிசிசி கூறியிருந்தது ஏற்கனவே இந்த தொடரில் அவர் துணை கேப்டனாக செயலாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியா ஐசிசி சிறந்த ஆல் ரவுண்டர் பட்டியலில் தற்போது முதலிடத்தில் முன்னேறி உள்ளார். அதாவது சர்வதேச டி20 போட்டிகளில் சிறந்த ஆல் ரவுண்டர் பட்டியலில் 222 புள்ளிகளுடன் முதலிடத்தில் முன்னேறி உள்ளார். இவரை தொடர்ந்து 2-வது இடத்தில் இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளரான ஹசரங்கா 222 புள்ளிகளுடன் இடம் பெற்றுள்ளார்.
டி20 ஆல்-ரவுண்டர் தரவரிசை :
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…