கிரிக்கெட்டில் ஒரங்கட்டப்பட்ட ஹர்திக்-ராகுல்..!!!சேர்க்கப்பட்ட 2 தமிழக வீரர்கள்..!!!

Default Image

ஹர்திக் பாண்டியா,ராகுல் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதன் எதிரொலியாக அணியில் 2 தமிழக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

Image result for hardik pandya

பெண்கள் குறித்து தவறாக கருத்துகளை தெரிவித்த ஹர்திக் பாண்டியா,ராகுல் மீது  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் முன்னோட்டமாக  இவர்கள் இருவரும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதுடன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையேயான போட்டிகளி இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் இவர்கள்  இருவருக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ  அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் அறிவித்தது.

Image result for BCCIஅணியில் சேர்க்கப்பட்டுள்ள ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் வருகிற 15 ம் தேதி நடைபெறுகின்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் சேர்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மற்றொரு வீரரான சுப்மன் கில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் தான் இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது.


யார் இந்த இருவர்கள் என்று பார்க்கும் போது 19 வயதே ஆன சுப்மன் கில், இவர் அண்மையில் நடந்த ரஞ்சிக் கோப்பைக்காக 10 இன்னிங்சில் விளையாடி 790 ரன்கள் குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 2 இரட்டை சதம் மற்றும் 5 அரைசதமும் அடங்கும். மேலும் 2018 ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்கான உலகக்கோப்பைப் போட்டியில் சுப்மன் கில் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். தற்போது அவர் அறிமுக வீரராக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் களமிறங்க உள்ளார்.

மற்றொரு தமிழக வீரரான விஜய் சங்கர் 2 ஆவது முறையாக இந்திய அணியில் விளையாடுகின்ற வாய்ப்பை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடரில் நடந்த நிதாஹஸ் கோப்பையில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.மேலும்  நீக்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்ப ஆல்ரவுண்டர்  இந்திய அணிக்கு தேவை என்பாதல் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்