ஹர்திக் பந்து வீசாதது உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பாதிப்பை உருவாக்கும்: சபா கரீம்..!

ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்து வீசாததால் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் பாதிப்பை ஏற்படுத்துவார் சபா கரீம் கூறினார்.
துபாயில் நடைபெற கூடிய 2021 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவான்,குல்தீப் யாதவ்,நடராஜன் மற்றும் சஹால் போன்ற வீரர்கள் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக கோப்பை தொடரில் தேர்வாகிய சிலர் வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடவில்லை.
இந்நிலையில், இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 இன் இரண்டாம் கட்டத்தில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்து வீசாதது பெரும் பேசும் பொருளாக பேசப்பட்டு வருகிறது. சில வாரங்களுக்குப் முன் ஹர்திக் பாண்டியா டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கிடையில், முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சபா கரீம் ஐபிஎல் 2021 இல் ஹர்திக் பாண்டியா பந்துவீசவில்லை என்று கவலை தெரிவித்தார். யூடியூப் சேனல் ஒன்றில் சபா கரீம் பேசுகையில், ஹர்திக் பாண்டியா வரவிருக்கும் உலகக் கோப்பையில் விளையாடும் XI இல் பெரும் பாதிப்பதை ஏற்படுத்துவார். ஹர்திக் பாண்டியா ஆறாவது பந்து வீச்சாளராக டி20 உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹர்திக் பந்துவீசாதது மும்பை இந்தியன்ஸுக்கு பிரச்சினைகளை உருவாக்கியதைப் போல இந்திய அணிக்கு பாதிப்பை உருவாக்கும். மும்பை அணி விளையாடும் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஹர்திக் பாண்டியா 2-3 ஓவர்கள் கூட வீசினால் அது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்றார். ஐசிசி டி 20 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் 15 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்த மும்பை வீரர்களான ஹர்திக், சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் நிலை குறித்து எடுத்துரைத்தார்.
அவரகளின் மோசமான ஆட்டம் இந்திய அணி நிர்வாகத்திற்கு பெரும் கவலையாக உள்ளது. இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட மும்பை வீரர்கள் டி20 உலகக் கோப்பையில் தங்கள் திறமையை நிகழ்த்துவார்கள் என்று நம்புகிறேன் என்று சபா கரீம் கூறினார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹர் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. இதனால், அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் சஹாலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.