ஹர்திக் பாண்டியா தான் கேப்டனுக்கு தகுதியான ஆள்! முன்னாள் கிரிக்கெட் வீரர் பேச்சு!
ஹர்திக் பாண்டியா : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இது ஹர்திக் பாண்டியா ரசிகர்களுக்கு மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில், அணியில் ஹர்திக் பாண்டியவை கேப்டனாக அறிவிக்கப்படாதது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” என்னை பொறுத்தவரை நான் இலங்கை அணிக்கு எதிரான இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக செயல்படுவார் என நினைத்தேன். ஆனால், அவர் கேப்டனாக இல்லை.
ஹர்திக் பாண்டியா, குஜராத் டைட்டன்ஸ் அணியை இரண்டு ஆண்டுகள் வழிநடத்தி, இரண்டு முறையும் இறுதிப் போட்டிக்கு கொண்டு வந்து, பட்டத்தை வென்றுள்ளார். அது மட்டுமின்றி, இதற்கு முன்னதாகவும், ஹர்திக் ஏற்கனவே டி20 அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவர். அவர் துணை கேப்டனாக இருந்துள்ளார் எனவே அவரை போல ஒருவரை கேப்டனாக போடாதது கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது.
கேப்டன் கம்பீர் சில சிறந்த அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார் மற்றும் ஆட்டம் பற்றிய அறிவு கொண்டவர். அவர் சூர்யகுமார் யாதவ் நன்றாக செயல்படுகிறார் மற்றும் அணியை நன்றாக வழிநடத்துவார் என்று நினைத்து இதற்கு முடிவெடுத்து இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அவரும் நல்ல வீரர் தான். ஆனால், என்னை பொறுத்தவரை பாண்டியா தான் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் ” என்று கைஃப் தன் கருத்தை தெரிவித்தார்.