இதுக்கு தான் ஹர்திக் வேணும்! குஜராத் படுதோல்வியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!!

Aakash Chopra hardik pandya

ஐபிஎல் 2024 : ஹர்திக் பாண்டியா இல்லாதது குஜராத் அணியை பாதிக்கிறது என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி  17.3 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 89  ரன்கள்மட்டுமே எடுத்தது. இது தான் ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணி தனிப்பட்டமுறையில் அடித்த குறைவான ரன்கள். 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய டார்கெட்டுடன் களமிறங்கிய டெல்லி 8.5  ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

குஜராத் அணி படு தோல்வியை சந்தித்து இருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” டெல்லிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி மோசமாக விளையாடியதாக நான் நினைக்கிறேன். பேட்டிங் செய்ய வந்தபோது தொடர்ச்சியாக விக்கெட் இழந்தது பார்க்கவே மோசமாக இருந்தது.

குஜராத் அணியில் ரஷீத் கான் ஒரு அளவுக்கு ரன்கள் அடித்துக்கொடுத்தார். சாய் சுதர்ஷன் தேவையில்லாமல் அவுட் ஆனார் என்று தான் நான் சொல்வேன். கொஞ்சம் பந்தை கவனித்து ஓடி இருந்தால் நிச்சியமாக ரன்-அவுட் ஆகி இருக்க மாட்டார். இப்படியான குறைவான ரன்கள் வந்ததுக்கு முக்கிய காரணமே குஜராத் அணி தொடர்ச்சியாக விக்கெட்டை கொடுத்தது தான்.

விக்கெட் கொடுக்காமல் ஒரு அளவுக்கு தொடர்ச்சியாக தட்டி தட்டி விளையாடி இருந்தால் கூட நல்ல ரன்கள் கிடைத்து இருக்கும். ஒரு சுமாரான டார்கெட்டை டெல்லி அணிக்கு எதிராக வைத்து இருக்கலாம். ஆனால், குஜராத் அணி அதனை செய்யவில்லை. டெல்லி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி வெற்றிபெற்றது” எனவும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஆகாஷ் சோப்ரா ”  ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் இப்போது இருக்கிறார். அவர் அங்கு இருந்தும் மும்பை இன்னும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும் கூட  அவர் இல்லாதது குஜராத் டைட்டன்ஸ் அணியை இந்த சீசனில் நிச்சயம் பாதிக்கிறது”  என்றும் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணியை ஹர்திக் பாண்டியா தான் வழிநடத்தி வந்தார். பிறகு இந்த சீசனில் இருந்து ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tvk
TVK Leader Vijay speech in TVK general committee meeting
thirumavalavan aadhav arjuna
RCB IPL
Aadhav Arjuna
TVK General Committee meeting
edappadi palanisamy sabanayagar appavu