ஆர்ச்சர் கருப்பு டாக்சியா? ஹர்பஜன் சிங் கருத்தால் வெடித்த ‘நிறவெறி’ சர்ச்சை!
நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை கருப்பு டாக்சி உடன் ஒப்பிட்ட ஹர்பஜனின் கருத்து சர்ச்சையாகியுள்ளது.

ஹைதிராபாத் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி ஹைதிராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வர்ர்ணையாளர்களில் ஒருவராக போட்டியை வர்ணை செய்து வந்தார். அப்போது அவர் பேசிய கருத்து தற்போது நிறவெறி சர்ச்சையாக மாறியுள்ளது.
இந்த போட்டியில் ஹைதராபாத் அணியினர் ராஜஸ்தான் அணி பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 76 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார். ஆர்ச்சர் 18வது ஓவரை வீசியபோது எதிர்முனையில் இஷான் கிஷான் மற்றும் கிளாசன் ஆகியோர் ஆடிக்கொண்டிருந்தனர். அந்த ஓவரில் மட்டுமே ஒரு நோ-பால் உட்பட 5 பவுண்டரிகள் 2 ரன்கள் என மொத்தம் 23 ரன்கள் அடிக்கப்பட்டது.
இதனை குறிப்பிட்டு பேசிய போட்டி வர்ணையாளர் ஹர்பஜன் சிங், “லண்டனில் கருப்பு டாக்சியின் மீட்டர் வேகமாக ஓடும். இன்று அதே போல ஆர்ச்சரின் மீட்டரும் அப்படித்தான் ஓடுகிறது.” என விமர்சனம் செய்தார். ஹர்பஜன் கூறிய இந்த கருத்து பொதுவெளியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
லண்டன் கருப்பு டாக்சி உடன் ஒப்பிட்டு ஜோப்ரா ஆர்ச்சரின் நிறத்தை குறிப்பிட்டு நிறவெறி கருத்தை ஹர்பஜன் பேசியுள்ளார் என்று பல்வேறு தரப்பினர் இணையத்தில் எதிர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இவரை போட்டி வர்ணை செய்ய தடை விதிக்க வேண்டும் என்றளவுக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், இதுபற்றி எந்த விளக்கத்தையும் ஹர்பஜன் சிங் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெரும் சோகம்.! அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்!
March 26, 2025