ஜெய்ஸ்வால் ஓப்பனிங் இறங்கினால் சரிவராது! ஹர்பஜன் சிங் சொன்ன விஷயம்?
டி20 உலகக்கோப்பை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா – அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டி இன்று நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் இறங்கினால் சரியாக இருக்காது, விராட் கோலி தான் இறங்கவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய ஹர்பஜன் சிங் ” அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடப்போகும் ஆடுகளத்தில் பேட்டிங் ரொம்பவே கடினமாக இருக்கும். எனவே, இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் உங்களுக்கு உங்கள் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தால் சரியாக இருக்கும். எனவே, ரோஹித் ஷர்மாவுடன் விராட் கோலி ஓப்பனிங் செய்தால் சரியாக இருக்கும். ஜெய்ஸ்வால் ஓப்பனிங் இறங்கினால் அது சரியாக இருக்காது” என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.