ஐபிஎல் ஃபைனல் இந்த இரண்டு அணிக்கு தான் நடக்கும் ! ஹர்பஜன் சிங் கணிப்பு!

harbhajan singh

சென்னை : ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியும், பெங்களூர் அணியும் மோதும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், எந்த அணி இந்த சீசன் கோப்பையை வெல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இந்த வருடம் இந்த இரண்டு அணிகளுக்கு தான் இறுதிப்போட்டி நடக்கும் என கணித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ஹர்பஜன் சிங் ” நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி மற்றும் கொல்கத்தா அணி இறுதிப் போட்டியில் விளையாடும் என்று நான் நினைக்கிறன். பெங்களூர் அணி நல்ல பார்மில் இருப்பதால் அவர்கள் கோப்பையை கூட வெல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறது. கண்டிப்பாக அவர்களால் வெல்ல முடியும்.

இதுவரை அவர்கள் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு ரன்னுக்கும் ரொம்பவே கடுமையாக போராடியிருக்கிறார்கள். இதே போலவே வரும் போட்டிகளில் கண்டிப்பாக விளையாடினாள் இந்த அணியை நிறுத்துவது கடினமாக இருக்கும். எனக்கு தோணும் விஷயம் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியும், பெங்களூர் அணியும் மோதும் என்று மனதில் தோணுகிறது” எனவும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலிடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இரண்டாவது இடத்திலும் குவாலிஃபையர் 1ல் மோதுகிறார்கள். அடுத்ததாக மூன்றாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 4-வது இடத்தில் பெங்களூர் அணியும் எலிமினேட்டரில் மோதவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்