கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு அமல்படுத்தியிருக்கும் சூழலில் ஐ.பி.எல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படாமல் இருந்து வருகின்றன.
முன்னதாக ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிதிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊரடங்கு வரும் 14ஆம் தேதி தான் முடிகிறது என்பதால் , உடனடியாக ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால், இந்த ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும் என ஐபிஎல் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், ‘ ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் விளையாட தயார். இதனால், ரசிகர்கள் டிவியிலாவது போட்டிகளை பார்த்து மகிழ்வார்கள். என தெரிவித்துள்ளார்.
மேலும், ‘ கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன், மைதானத்தில் வீரர்களின் தங்கும் அறை உள்ளிட்டவை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படவேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியானவுடன் விரைவில் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்கப்படவேண்டும்.’ எனவும் ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…