‘ஹேப்பி ரிட்டையர்மென்ட்’! சொதப்பிய ரோஹித், கோலி, கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற 340 ரன்களை துரத்திய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா முறையே 5 மற்றும் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

RohitSharma AND virat

மெல்போர்ன் : இந்தியாவின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய வீரர்களுக்கு என்னதான் ஆச்சு? என்கிற அளவுக்கு நடைபெற்று வரும் (BGT) ஆஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் இவர்களுடைய ரசிகர்கள் கடும் சோகத்தில் இருந்து வருகிறார்கள்.

அது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் நான்காவது இன்னிங்சில் 340 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி தொடர்ச்சியா விக்கெட்களை இழந்து போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று கடைசி நாள் (5ஆம் நாள்) ஆட்டத்தில் 340 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி  79.1 ஓவரில் 155 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால்,  4வது டெஸ்ட் போட்டியை 184 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்ரேலியா அணி வெற்றிபெற்று இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னேறியுள்ளது.

இந்த சூழலில், போட்டியில் மட்டுமின்றி ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் மற்றும் கோலியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து கலாய்த்து வருகிறார்கள். 4-வது போட்டியில் ரோஹித் (9), விராட் (5) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். எனவே, இருவரும் ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்போகிறார்கள் என்கிற அளவுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

சமூக வலைத்தளமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் happy retirement என்கிற டெக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து இருவரையும் கலாய்த்து வருகிறார்கள். எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஒருவர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு பெறுவதற்கான நேரம் இது தான்” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்