ஹேப்பி பர்த்டே மஹிந்திர சிங் தோனி! அசைக்க முடியாத தல தோனி உருவான விதம் ஒரு தொகுப்பு!

Default Image

இந்திய கிரிக்கெட் வீரர், வெற்றிகரமான கேப்டன், ஐசிசி நடத்திய அணைத்து விதமான போட்டிகளிலும் கோப்பையை கைப்பற்றியுள்ளவர், எந்தவித சூழ்நிலையிலும் கோபப்படாமல் அணியை கூலாக வழிநடத்துபவர் என புகழப்படுகிறார் மஹேந்திர சிங் தோனி!

2007ஆம் ஆண்டு உலககோப்பை போட்டியில் தோற்ற பிறகு முதன் முறையாக நடைபெற இருந்த டி20 உலகோப்பையை கடுமையாக எதிர்த்து பின்னர் சீனியர் வீரர்கள் இல்லாத அணிக்கு தலைமை பொறுப்பு ஏற்று தனது தலைமையை நிரூபிக்க தொடங்கினார் நம்ம தல தோனி.

 

ஆரம்பமே வெற்றி கோப்பையுடன் தொடங்கினார் தோனி. பின்னர் ட்ராவிட் ஓய்வு பெற அதன் பிறகு அணியை வழிநடத்த கமிட்டி யோசிக்கையில் தோனி பெயரை பரிந்துரை செய்தார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்.

டோனி எப்போதும் எதிர்காலத்திற்க்கான அணியை கட்டமைப்பதில் உறுதியாய் இருப்பார். ஆதலால் அவர் மீது வைக்கப்பட்ட முக்கிய குற்றசாட்டு அவர் சீனியர் வீரர்களை புறந்தள்ளுகிறார். ஆனால் அவர் வலிமையான இந்திய அணியை உலகக்கோப்பைக்காக தயார் செய்து கொண்டிருந்தார்.

அவர் 50 ஓவர் போட்டிகள் விளையாடும் இந்திய அணியை வழிநடத்த தொடங்கிய போதே ஆஸ்திரேலியா அணியை அந்த நாட்டிலேயே அவர்களை தோற்கடித்து 22 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சாதனையை நிகழ்த்தி காட்டினார் தோனி.

2009இல் கும்ளே ஓய்வு பெற மூன்று விதமான இந்திய அணிக்கும் கேப்டனாக தோனி மாறினார். தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளை தோற்கடித்து, முதன் முறையாக இந்திய அணி டெஸ்ட் போட்டி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது.

2011 உலகக்கோப்பை போட்டி பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. அணியில் ஒரு வீரராக சாதிக்காவிட்டாலும் அணி தலைவராக சிறப்பாக செயல்பட்டிருந்தார் தோனி. இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றியது =இந்திய அணி.

அதன் பிறகு 2013இல் நடைபெற்ற சேம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை வென்று ஐசிசி நடத்திய அனைத்து விதமான போட்டிகளிலும் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார் தோனி.

ரோஹித் சர்மா, பும்ப்ரா, புவனேஷ்குமார் போன்ற திறமையான வீரர்களுக்கு அணியில் தொடர் இடம் வழங்கி எதிர்கால இந்திய அணியை வலிமையாக கட்டமைத்த அந்த கேப்டன் தோனி தனது கேப்டன் பொறுப்பை விளக்கி கொண்டு தற்போது அணியில் பொறுப்பும் அனுபவமும் உள்ள முக்கிய வீரராக வலம் வருகிறார் மஹிந்திர சிங் தோனி!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்