பிறந்த நாள் வாழ்த்துக்கள் “தாதா” – சச்சின்..!
சௌரவ் கங்குலிக்கு சச்சின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்பொழுது பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி இந்திய கிரிக்கெட்காக செய்த சாதனைகள் பற்றி சொல்லி தெரிய வேண்டாம், தோனி , கோலி, ரோஹித், போன்ற சிறந்த கேப்டன்கள் இருந்தாலும் சௌரவ் கங்குலி சிறந்த கேப்டன் என்று அதிகபேர் கூறுவது உண்டு,
இந்நிலையில் இவருக்கு இன்று 49 வது பிறந்தநாள் இவருடைய பிறந்த நாளை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். மேலும் இவருக்கு அணைத்து கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் தனது ட்வீட்டர் பக்கத்தில் “பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாதா”. நாம் களத்துக்கு வெளியே இருக்கும் கூட்டணி, களத்துக்கு உள்ளே இருக்கும் கூட்டணியை போல மிகவும் பலமாக இருக்கும் என நம்புகிறேன். சிறப்பான வருடம் அமைய வாழ்த்துக்கள் என்று பதிவு செய்துள்ளார்.
Happy birthday Dadi!
Hope our off-field partnership keeps going strong like our on-field ones. Wish you a blessed year ahead. pic.twitter.com/jOmq9XN07w— Sachin Tendulkar (@sachin_rt) July 8, 2020