ஒரு வழியாக இங்கிலாந்து தொடருக்கு தேர்வான அஜிங்கியா ரஹானே!
இந்திய அணியில் இருந்து தற்போது ஓரம் கட்டப்பட்டு உள்ள வீரர் அஜின்கியா ரகானே தற்போது இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் தொடரில் விளையாட உள்ளார். இங்கிலாந்து நடக்க உள்ள உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி தொடருக்கான அணியில் தேர்வாகியுள்ளார் ரஹானே.
தென் ஆப்பிரிக்க ஐடன் மார்க்ரம் ஹாம்சைர் அணியில் இருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக அந்த வாய்ப்பு ரஹானேவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.